18 வயது ஆகாத காதலிக்கு தாலி கட்டிய இளைஞர் - பிரித்துவைத்த பெற்றோர்... விபரீதத்தில் முடிந்த காதல்!

Tamil Nadu Latest News: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் காதல் மனைவியை பிரித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Sep 25, 2023, 11:46 AM IST
  • அந்த பெண்ணுக்கு 18 வயது நிரம்பவில்லை.
  • இதனால் திருமணம் செய்த அந்த ஜோடியை போலீசார் பெற்றோருடன் அனுப்பினர்.
  • இருவரையும் காப்பகத்திற்கு அனுப்பவில்லை.
18 வயது ஆகாத காதலிக்கு தாலி கட்டிய இளைஞர் - பிரித்துவைத்த பெற்றோர்... விபரீதத்தில் முடிந்த காதல்!  title=

Tamil Nadu Latest News: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதுப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மகன் சஞ்சய் புதுப்பேர் அருகே உள்ள சக்தி நகரில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சஞ்சய்யின் பெற்றோர், இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் சஞ்சையும் அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

18 வயது நிரம்பவில்லை

இதைத் தொடர்ந்து சஞ்சையை காணவில்லை என்று அவரது தந்தை சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் மற்றும் அந்தப் பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல் துறையினர் சோமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு 18 வயது நிரம்பவில்லை என்றும் சஞ்சய்க்கும் 20 வயது தான் ஆகிறது என்பதாலும் இவர்கள் திருமணம் சட்டப்படி செல்லாது என கூறியுள்ளனர். அதோடு இருவரையும்  காப்பகத்துக்கு அனுப்பாமல்  தனித்தனியாக அவர்களின் பெற்றோர்களுடன் வீட்டுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?

அவசர அவசரமாக

காதலியை பிரிந்து மனமுடைந்த சஞ்சய் தன்னுடைய வீட்டிலேயே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சஞ்சய்யின் உறவினர்கள் அவசர அவசரமாக அவரின் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்கொலையா அல்லது....

அதன் அடிப்படையில் சோமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து பாதி எரிந்த நிலையில் இருந்த சஞ்சையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சஞ்சய் தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சென்னை அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் ஒரு குடும்பமும் இருப்பதை அறிந்ததால், ஏமாற்றமடைந்த காதலன் காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னையையே உலுக்கியிருந்தது. அதை தொடர்ந்து, தற்போது சோமங்கலம் பகுதியில் நடந்த இந்த சம்பவமும்  பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

(தற்கொலை எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)

மேலும் படிக்க | ஆசையாய் காதலித்து திருமணம்! மனைவியை கொன்ற கணவர்! அப்புறம் தான் ட்விஸ்டே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News