18 MLA-க்கள் மீதான தகுதி நீக்கம் வழக்கு! இதுவரை நடந்தது என்ன?

18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு 3வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்குகிறார்.

Last Updated : Oct 25, 2018, 09:51 AM IST
18 MLA-க்கள் மீதான தகுதி நீக்கம் வழக்கு! இதுவரை நடந்தது என்ன? title=

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு 3வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்குகிறார்.

18 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கம் தீர்ப்பில் இதுவரை நடந்தது என்ன???

1. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். 


2. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.


3. கடந்த ஜூன் 14ம் தேதிஇந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.

3.(1). சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்திருந்தார்.

3.(2). சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்திருந்தார். 

இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.


4. கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், முதல் விசாரணையை துவங்கினார்.


5. 12 நாட்களாக நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.


6. தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்த இந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நள்ளிரவு வெளியான ஐகோர்ட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News