ஒரே விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 113 பேர்! வசமாக சிக்கியது எப்படி?

ஓமன் நாட்டிலிருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை தங்க கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - Yuvashree | Last Updated : Sep 15, 2023, 06:25 PM IST
  • சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.
  • 100க்கும் மேற்பட்டோர் 13 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
  • இவர்கள் பிடிப்பட்டது எப்படி? முழு விவரம்!
ஒரே விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 113 பேர்! வசமாக சிக்கியது எப்படி? title=

ஓமன் நாட்டிலிருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை தங்க கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை 8 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் 186 பயணிகள் வந்தனர். அவர்களில் சுமார் 100 மேற்பட்ட பயணிகள்,தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்துள்ளது.

இதை அடுத்து உஷாரான சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று. தீவிர  விசாரணை நடத்தினர். 

மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை

அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து, முழுமையாக சோதனைகள் நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை, நள்ளிரவு வரை நீடித்தது. சோதனையின் முடிவில் அவர்களிடமிருந்து பெரும் அளவு தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலையில் இருந்து நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில், பயணிகளிடம் இருந்து 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பசை வடிவிலும், தங்க கட்டிகளாகவும் கடத்தி வந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், பதப்படுத்தப்பட்ட குங்குமப் பூக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே சட்டப்படி கைதுசெய்ய முடியும் என்பதால், கடத்தலில் ஈடுபட்ட 113 பேரையும் ஜாமீனில் விடுவித்திருக்கின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள். இருப்பினும் இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

நூற்றுக்கும் மேற்பட்ட  பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்திற்குள், சந்தேகத்தில் நிறுத்தி வைத்து, பல மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்திருப்பது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | அண்ணா பெயரை கலங்கப்படுத்தக் கூடாது... அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News