#TNBudget2019: விவசாயிகளுக்கு ₹ 10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன்....

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு வைத்துள்ளதாக தமிழக நிதிநிலை அறிக்கையில் துணை முதலவர் அறிவித்துள்ளார்! 

Last Updated : Feb 8, 2019, 12:41 PM IST
#TNBudget2019: விவசாயிகளுக்கு ₹ 10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன்.... title=

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு வைத்துள்ளதாக தமிழக நிதிநிலை அறிக்கையில் துணை முதலவர் அறிவித்துள்ளார்! 

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார். 

அதில் வேளாண் துறையின் கீழ் கீழ்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

உணவு மானியத்திற்காக ரூ.1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

> விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும்.

> ​​​​​​​தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு.

> ​விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.

> ​பால் உற்பத்திக்காக, 237 கோடி ரூபாயில் 3 புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். 

> ​​​​​​​விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 8.72 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர்.

> பயிர் காப்பீட்டிற்கு ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> ரூ 84 கோடி மானியத்தில்  சூரிய சக்தியில் பம்பு செட்டுகளை இயக்க 90 சதவீத மானியம் வழங்குகிறோம். 10 குதிரை சக்திகள் வரை இயங்கும் 2000 சூரிய  மின்சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.

> நீர் சேமிப்பை அதிகரிக்க நுண்ணீர் பாசனத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் 1361 கோடி செலவில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

> வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21.70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

> 2019-20 ஆம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய பகுதிகள், பயிர்கள் சேர்க்கப்படும்.

> ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற திடீர் பாதிப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும். இத்திட்டத்திற்கான தமிழக காப்பீடு பங்குத்தொகையாக 621.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

> கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும். நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு. 

 

Trending News