ஒரு பிஸ்கட்டுக்கு ஒரு லட்சம் கொடுத்த ஐடிசி நிறுவனம்! இப்படியும் நடக்குமா?

ஐடிசி நிறுவனம் ஏமாற்றப்பட்ட கஸ்டமருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை விரிவாக காணலாம்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 6, 2023, 02:01 PM IST
  • ஐடிசி லிமிடெட் வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.
  • சென்னை எம்எம்டிஏ மாத்தூரைச் சேர்ந்த பி டில்லிபாபு என்பவர் மணலியில் உள்ள சில்லறை விற்பனைக் கடையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கினார்.
  • இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஒரு பிஸ்கட்டுக்கு ஒரு லட்சம் கொடுத்த ஐடிசி நிறுவனம்! இப்படியும் நடக்குமா? title=

கடந்த டிசம்பர் 2021 ஆம் ஆண்டு சென்னை மணலியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் 24 பாக்கெட் சன்பீஸ்ட் மாரி லைட் பிஸ்கட் பாக்கெட்டுகளை மொத்த விலைக் கடை ஒன்றில் இருந்து வாங்கியுள்ளார். அதில் ஒரு பாக்கெட்டை பிரித்து பார்த்த போது 15 பிஸ்கட்டுகள் இருந்துள்ளது. ஆனால் அந்த பாக்கெட்டின் அட்டையில் 16 பிஸ்கட்டுகள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் தான் வாங்கிய கடைக்குச் சென்று முதலில் கேட்டுள்ளார். அதன்பிறகு நேரடியாக ஐடிசி நிறுவனத்தை அணுகியுள்ளார். தனக்கு உரிய பதில் கிடைக்காததால், நுகர்வோர் நீதிமன்றம் சென்ற அவர், ஒரு பாக்கெட்டில் உள்ள ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா எனவும், இந்த நிறுவனம் தினமும் 50 லட்சம் பாக்கெட் பிஸ்கட்டுகளை தயாரிப்பதாகவும், இதன் மூலம் ஒரு பிஸ்கட்டை குறைத்து வைத்து கிட்டதட்ட 29 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். 

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது - நக்கலாக டீல் செய்த உதயநிதி ஸ்டாலின்

இந்த புகாருக்கு பதிலளித்த ஐடிசி நிறுவனம், அந்த குறிப்பிட்ட பிஸ்கட் பாக்கெட் எண்ணிக்கை கணக்கில் இல்லாமல், எடை கணக்கில் தான் பேக் செய்யப்படும் என்றும், அதனால் தான் விளம்பரத்தில் 76 கிராம் என எடையை குறிப்பிட்டதாகவும் தெரிவித்தது. டில்லி பாபு வாங்கிய பாக்கெட்டின் எடை 74 கிராம் இருந்துள்ளது. அதோடு 2011 ஆம் ஆண்டின் சட்ட அளவியல் விதிகளை சுட்டிக்காட்டிய ஐடிசி தரப்பு வழக்கறிஞர் 4.5 கிராம் வரை எடையில் மாற்றம் இருக்கலாம் என்பதை குறிப்பிட்டார். 

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நுகர்வோர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இது மக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறி ஐடிசி நிறுவனம் பாதிக்கப்பட்ட கஸ்டமருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஒரே ஒரு பிஸ்கட் வைக்காததால் ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக கொடுத்துள்ளது ஐடிசி நிறுவனம்.

மேலும் படிக்க | ’சாதிய ஏற்றத்தாழ்வு தான் சனாதனம், அதை ஒழிக்கணும்’ உதயநிதிக்கு கார்த்திக் சிதம்பரம் ஆதரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News