ஆந்திரா மாநிலம் அமராவதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கு இடமான ஒரு பெண்ணை சுற்றி வந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த ஆந்திர போலீசார். இன்று இந்த பெண்ணை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது, அவர் ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எனது தந்தை என்றும், ஜே.டி. லட்சுமிநாராயண என் கணவரும் என்றும் கூறியுள்ளார். இது ஆந்திரா போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரிடம் இருந்த ஆதார் அடையாள அட்டைடையை வாங்கி பார்த்த போது, அவரது பெயர் எர்வின் ரீடா ஆசீர்வாதம் என்றும், அவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், 1972-ம் ஆண்டு பிறந்தார் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் போலீசார் விசாரித்ததில், அமராவதிக்கு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு மனநல காப்பகத்தில் இருந்து வந்திருப்பார் என தகவல் கிடைத்தது.
அந்த பெண் தன் கணவர் என்று கூறிய ஜே.டி. லட்சுமிநாராயண ஒரு ஐபிஎஸ் ஆபிசர் ஆவார். அவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல் துறையின் உயர் பதவியில் இருக்கிறார்.
ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நாரா லோகேஷ் என்ற ஒரே மகன் தான் இருக்கிறார். அவர் தற்போது ஆந்திரா மாநிலத்தின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.