தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளை போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
நேற்று முன்தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முழு அடைப்பு காரணமாக கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரியில் நிறுத்தப்பட்டுள்ளன.