2007 T20 World Cup:
இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் (MS Dhoni) பொன்னான பயணம் 2007 டி 20 உலகக் கோப்பை வெற்றியுடன் துவங்கியது. அந்த உலகக் கோப்பை வெற்றியை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியாது.
இளமையான ஒரு அணியைக் கொண்டு அந்த உலகக் கோப்பையை வென்று, தோனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இந்த உலகக் கோப்பை வெற்றியில் ஒரு முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
யுவராஜின் பெரிய வெளிப்பாடு
எம்.எஸ். தோனியின் (MS Dhoni) சக வீரரான யுவராஜ் சிங் இப்போது 2007 உலகக் கோப்பை குறித்து ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளார். 2007 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தான் நியமிக்கப்படலாம் என நம்பியதாக யுவராஜ் கூறினார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த தோனியின் மீது தேர்வாளர்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது என்று அவர் தன் நிராசையை வெளிப்படுத்தியுள்ளார்.
22 நூல் போட்காஸ்டில், யுவராஜ், '50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இந்தியா ஒழுங்காக விளையாடாமல் வெளியேறியது. அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு உடனடியாக இங்கிலாந்திலும் ஒரு பெரிய சுற்றுப்பயணம் இருந்தது. இது மட்டுமல்லாமல், இதற்கிடையில் தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்துக்கான ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது. இது தவிர, அது டி 20 உலகக் கோப்பைக்கான மாதமாகவும் இருந்தது. ஆகையால் வீரர்கள் சுமார் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டியிருந்தது.
ALSO READ:ICC Test Ranking: 5-வது இடத்தில் விராட் கோலி, முதலிடத்தில் யார்?
'நான் கேப்டன் பதவியைப் பெறுவேன் என்று நம்பினேன்'
மேலும் பேசிய யுவராஜ் சிங் (Yuvraj Singh), "அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு தங்களுக்கு ஓய்வு தேவை என்று சீனியர்கள் நினைத்திருக்கலாம். அதனால்தான் டி 20 உலகக் கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சீனியர் வீரர்கள் பலரும் விலகிக்கொண்டதால், டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டன் பதவியை நான் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், டி-20 உலகக் கோப்பைக்கு எம்.எஸ். தோனி கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. யார் அணியின் கேப்டனாக இருந்தாலும், அவருக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பையில் அதிரடியாக ஆடினார் யுவராஜ் சிங்
எம்.எஸ். தோனியின் தலைமையில் 2007 உலகக் கோப்பையை இந்திய அணி (Team India) வென்றது உண்மைதான். ஆனால், அந்த சாதனையை இந்திய அணி செய்ய யுவ்ராஜ் சிங், கவுதம் கம்பீர் போன்ற வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார்கள். 2007 உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் யுவராஜ் 6 சிக்ஸர்களை அடித்தார். இது மட்டுமல்லாமல், 2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையிலும் அபாரமாக ஆடிய யுவ்ராஜ் சிங் உலகக் கோப்பை போட்டியின் வீரராக (Player of the Tournament) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR