World Test Championship Final 2023: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூன் 8) தொடங்கியது.
முதல் நாள்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் (85 ஓவர்கள்), 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 327 ரன்களை எடுத்தது. ஷமி, சிராஜ், ஷர்துல் ஆகியோர் நேற்றைய ஆட்டத்தில் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர். இந்நிலையில், ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து உயிரிழப்பு! ரோஹித் சர்மா ரூ 15 கோடி நன்கொடை கொடுத்தாரா?
சிராஜ் எடுத்த விக்கெட்
ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா பவுண்டரிகள் மூலம் ரன்களை குவித்து வந்தது. ஸ்டீவ் சதம் அடித்த நிலையில், ஹெட் 150 ரன்களை கடந்தார். அப்போது, சிராஜ் லெக் ஸ்டம்பிற்கு வெளியே சற்று வைடாக வீசிய பந்தை அடிக்க ஹெட் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிரீன் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தொடங்கினாலும், அவரும் 6 ரன்களில் ஷமியின் பந்துவீச்சில் கில்லிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
லார்டு ஷர்துல்
தொடர்ந்து, நிதானம் காட்டி வந்த ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய அந்த பந்து இன்சைட் எட்ஜ் ஆகி, ஸ்டம்பை பதம்பார்த்தது. அடுத்து வந்த ஸ்டார்க் 5 ரன்களில், மாற்று வீரராக வந்த அக்சரின் அற்புதமான த்ரோல் ரன்-அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து, அலெக்ஸ் கேரி, கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை வரை (109 ஓவர்கள்) 422 ரன்களை எடுத்துள்ள ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பின், இரண்டாம் செஷனில் அலெக்ஸ் கெரி சற்று ரன்களை குவித்தார். அவர் அரைசதத்தை நெருங்கி வந்த நிலையில், ஜடேஜாவை ரோஹித் வந்துவீச அழைத்தார். அவர் ஜடேஜா பந்துவீச்சில் ஸ்வீப் அடிக்க முயற்சிக்க எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். கேரி 48 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, லயான் 9, கம்மின்ஸ் 9 ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தனர். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி, ஷர்துல் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மொத்தம் 121.3 ஓவர்கள் வீசப்பட்டது.
Mohd. Siraj wraps up the innings by picking the final two wickets
Australia all out for 469 in the first innings.
Scorecard - https://t.co/0nYl21pwaw…#TeamIndia | #WTC23 | @mdsirajofficial pic.twitter.com/QUjNXEv6GH
— BCCI (@BCCI) June 8, 2023
போக போக கடினம் தான்
தற்போது வரை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், ஆடுகளத்தில் பிளவுகள் அதிகமாகி வரும் நிலையில், போக போக பேட்டிங் செய்வது கடினமாகலாம் என ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆங்கில வர்ணனையில் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ