உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர் ‘தி அண்டர்டேக்கர்(The Undertaker)’ WWE -லிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவரது மூன்று தசாப்த மல்யுத்த வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது.
புகழ்பெற்ற மல்யுத்த வீரரின் ஆவணப்படங்களான ‘Undertaker: The Last Ride' -ன் கடைசி எபிசோடில் இந்த செய்தி ரசிகர்களுக்கு தெரியவந்தது. தொடரின் இறுதி அத்தியாயத்தில், அண்டர்டேக்கர் தனக்கு மீண்டும் வளையத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்காததால் தான் இந்த முடிவுக்கு வந்தாக வெளிப்படுத்தியுள்ளார்.
Also Read | மீண்டும் WWE களத்திற்கு திருப்பும் ராண்டி ஆர்டன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!...
சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் என் தொழிற்முறை வாழ்வின் இந்த கட்டத்தில் இதை தான் தெரிவித்து தான் ஆகவேண்டும். எனக்கு மீண்டும் வாழ்ப்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை, அதை ஏற்றுக்கொள்ளும் கட்டத்தில் தான் நான் இருக்கிறேன். இந்த கவ்பாய் உண்மையில் விலகிச் செல்லும் நேரம் இது, "தி அண்டர்டேக்கர், என்பதன் உண்மையான பெயர் மார்க் கால்வே, உண்மை வாழ்வுக்கு திரும்ப வேண்டிய நேரம் இது’ என ஆவணப்படத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி அத்தியாயத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஜெயிக்க எதுவும் இல்லை. நான் சாதிக்க எதுவும் இல்லை. விளையாட்டு மாறிவிட்டது. புதிய தோழர்கள் வர வேண்டிய நேரம் இது. நேரம் சரியாகத் தெரிகிறது. இந்த ஆவணப்படம் அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியது என்று நினைக்கிறேன்." என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Coronavirus எதிரொலி; பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் WWE..!
WWE-ல் அண்டர்டேக்கரின் இறுதி போட்டி ரெஸில்மேனியா 36-ல் (WrestleMania 36) இடம்பெற்றது. அவரும் AJ ஸ்டைல்களும் ஏப்ரல் மாதம் ஒரு போனார்ட் போட்டியில் சண்டையிட்டபோது, அதில் டெட்மேன் வெற்றி பெற்றார்.
டெட் டிபியாஸின் "மில்லியன் டாலர் அணியின்" இறுதி உறுப்பினராக அறிமுகமானபோது 1990-களின் சர்வைவர் தொடரில் அவர் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ரெஸில்மேனியாவில் 25-2 என்ற பொறாமைமிக்க சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.