World Cup 2019: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தய அணி..

பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!!

Last Updated : Jul 3, 2019, 07:47 AM IST
World Cup 2019: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தய அணி.. title=

பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!!

எட்க்பாஸ்டனில் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் ராகுல் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இருவரும் பங்களாதேஷ் வீரர்களின் பந்துகளை பதம் பார்த்தனர்.

இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து அணியின் ஸ்கோரை உயத்தினர். தொடக்க வீரர்களை பிரிக்க முடியாமல் பங்களாதேஷ் வீரர்கள் திணறிய நிலையில், 90 பந்துகளில் தனது சதத்தை கடந்தார் ஹிட்மேன் ரோகித். இந்நிலையில் செளமியா சர்க்கார் பந்து வீச்சில் லிட்டன் தாஸிடம் கேச் கொடுத்து 104 ரன்களில் வெளியேறினார் ரோகித். அவரை அடுத்து ராகுல் 77 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 26 ரன்னிலும் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அவர்களை அடுத்து வந்த பண்ட், தோனியுடன் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார். இந்நிலையில் பண்ட் 48 ரன்னிலும், தோனி 35 ரன்னிலும் வெளியேற அவர்களை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 சேர்த்தது. 

இந்நிலையில், 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணியின் தமீம் இக்பால் மற்றும் செளமியா சர்க்கார் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் தமீம் இக்பால் 22 ரன்கள் சேர்த்த நிலையில் LBW முறையில் அவுட்டாகி வெளியேற அவரை தொடர்ந்து செளமியா சர்க்கார் 33 ரன்னில் வெளியேறினார். அணியில், ஷாகிப் அல் ஹசன் 66 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 8-வது வீரராக களமிறங்கிய முகமது சைபுதீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளுக்கு 51 ரன்கள் குவிததார். அடுத்து யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே சேர்த்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்விகண்டது. இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது.

 

Trending News