இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கும் ஆகாஷ் தீப் யார்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் சேர்க்கபட்டுள்ளார். அவர் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 10, 2024, 02:29 PM IST
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்
  • இந்திய டெஸ்ட் அணியில் ஆகாஷ் தீப்
  • ஆர்சிபி அணி வீரருக்கு வாய்ப்பு கொடுத்த ரோகித்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கும் ஆகாஷ் தீப் யார்? title=

இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் மிக முக்கியமானதாக விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெறவில்லை. அடுத்து கேஎல்ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்திலிருந்து குணமடைந்தால் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக உடல் தகுதியை எட்டிவிட்டால் கூட இருவரும் நேரடியாக மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 

மேலும் படிக்க | பிருத்வி ஷாவின் அசாத்திய சாதனை... இந்திய கிரிக்கெட்டில் இதுதான் முதல்முறை - என்ன தெரியுமா?

இந்த சூழலில், காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறியிருக்கிறார். எனவே யாரை நீக்குவது என்கின்ற குழப்பம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஏற்படவில்லை. யாரை சேர்க்க வேண்டும் என்று தான் தீவிரமாக ஆலோசித்தார்கள். அந்தவகையில் டெஸ்ட் அணியில் புதிதாக வாய்ப்பு கொடுக்கப்பட்ட ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் அணியில் நீடிக்கிறார்கள். இத்தோடு வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பெங்கால் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆகாஷ் தீப் இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர். கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலும் இந்திய அணிக்கு தேர்வானார். 27 வயதான இந்த வலதுகை வேகப்பந்துவீச்சாளர், இந்தியாவில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்தச் சிறப்பான பந்துவீச்சு செயல்பாட்டின் காரணமாகவே தற்பொழுது இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஆகாஷ் தீப் 2022 ஆம் ஆண்டு அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார். மேலும் இவருடைய வேகத்தால் அணியின் கேப்டன் பாப் டூபளசிஸ் மிகவும் கவரப்பட்டார். இளம் வீரர்கள் சிறப்பான வேகத்தில் பந்து வீசுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக பேட்டிங்கில் சிக்ஸர்கள் அடிக்கவும் செய்கிறார். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இப்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்டுத்திக் கொள்ளும்பட்சத்தில் ஆகாஷ் தீப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

மேலும் படிக்க | இஷானுக்கு பிசிசிஐ மேல் இதற்குதான் கோபமா...?! வெளியான புதிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News