2 ஆண்டுகளாக டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை

டி-20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 2 வருடங்களாக இந்தியாவை டி20 தொடரில் வீழ்த்த முடியவில்லை.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 4, 2019, 03:44 PM IST
2 ஆண்டுகளாக டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை title=

புதுடெல்லி: மீண்டும் ஒருமுறை இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் (India vs West Indies) மோத தயாராக உள்ளன. இரு அணிகளும் நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள இருகின்றன. இந்திய அணி கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளை அவரது சொந்த மண்ணில் தாக்கியது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி டி-20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனாக இருக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச போட்டியில் ஆட உள்ளது. இந்தமுறை வெளிப்படையாக இந்திய அணியை, அதன் சொந்த மண்ணில் பழிவாங்க விரும்புகிறது. ஆனால் அவ்வாறு செய்வது எளிதானதாகத் தெரியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவை எதிர்த்து ஒரு முழுமையான வெற்றியைப் பெற முடியவில்லை என பதிவுகள் காட்டுகின்றன.

இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தை அடைந்துள்ளன. இப்போது பயிற்சி ஆட்டம் புதன்கிழமை தொடங்க உள்ளது. டி- 20 தொடரில், இந்தியாவை விராட் கோலியும், வெஸ்ட் இண்டீஸ் அணியை கீரோன் பொல்லார்ட் வழிநடத்துவார்கள்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே இதுவரை மொத்தம் 14 டி-20 போட்டிகள் விளையாடியுள்ளன. இதில் எட்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தங்கள் பெயர்களில் ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. அதாவது, தற்போது நடைபெற உள்ள தொடரின் மூன்று போட்டிகளிலும் விண்டீஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, இந்தியாவுக்கு சமமாக வர முடியும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்தியா 123 டி-20 போட்டிகளில் விளையாடியது, அவற்றில் 76 போட்டிகளில் வென்றது. மேற்கிந்திய தீவுகள் இதுவரை 116 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 50 போட்டிகளில் வென்றுள்ளன. அதிக டி-20 போட்டிகளில் வெற்றி அணி எதுவென்று பார்த்தால், பாகிஸ்தான் அணியாகும். அந்த அணி 149 போட்டிகளில் 90 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இந்திய டி 20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.

மேற்கிந்திய தீவுகள் டி 20 அணி: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்டின், ஷெரிஃபன் ரதர்ஃபோர்ட், லென்ட்ல் சிம்மன்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஹேடன் வால்ஸ் ஜூனியர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News