சர்ச்சை முறையில் ரன் அவுட்! கடுப்பான மயங்க் அகர்வால்!

ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் சர்ச்சையான முறையில் அவுட் ஆனார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 13, 2022, 08:34 AM IST
  • முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய வீரர்கள்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவிப்பு.
  • விக்கெட்களை இழந்து இலங்கை தடுமாற்றம்.
சர்ச்சை முறையில் ரன் அவுட்! கடுப்பான மயங்க் அகர்வால்!   title=

இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கியது.  பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.  வழக்கம் போல இந்திய அணியின் ஓப்பனிங் பேஸ்ட்மேனாக ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர்.  விஷ்வா பெர்னாண்டோ வீசிய பந்தை மயங்க் எதிர்கொண்டார்.  அப்போது பந்து பேடில் பட, ஸ்ரீலங்கா அணி எல்.பி.டபிள்யு அப்பில் செய்தனர்.  அம்பயர் அவுட் குடுக்க மறுக்கவே மயங்க் ரன் ஓட முயற்சித்தார்.  

 

மேலும் படிக்க | சொதப்பிய வீரர்கள்! 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன டீம் இந்தியா!

ரோஹித்-ம் பாதி ஓடிவந்து விட்டு மீதும் கிரீசிக்குள் சென்றார். அந்த சமயத்தில் ஸ்ரீலங்கா வீரர்கள் மயங்கை ரன் அவுட் செய்தனர்.  இதனால் துரதிஷ்டவசமாக அவுட் ஆனா மயங்க் அகர்வால் 4 ரன்களுடன் மிகவும் சோகத்துடன் பெவிலியன் திரும்பினார்.  இந்த ரன் அவுட் இந்திய ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது.  இந்திய பேஸ்ட்மேன்கள் ரன்கள் அடிக்க சொதப்பவே ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி 92 ரன்கள் குவித்தார்.  இதனால் இந்திய அணி ஓர் அளவிற்கு ரன்களை எட்டியது.

 

பின்பு, முதல் இன்னிங்சில் களம் இறங்கிய ஸ்ரீலங்கா அணியை இந்திய பவுலர்கள் கிறங்கடித்தனர்.  ஆரம்பம் முதலே வேகத்தில் மிரட்டிய பும்ரா குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.  மறுபுறம் ஷமி இரண்டு விக்கெட்களையும், அக்சார் படேல் ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஸ்ரீலங்கா அணி 6 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.  இன்னும் 166 ரன்கள் பின்னிலையில் உள்ள நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.  ஸ்ரீலங்கா அணியின் விக்கெட்களை வேகமாக எடுக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

 

மேலும் படிக்க | ப்பா.. என்ன மனுசன்யா இவரு.. 40 வயதில் தல தோனியின் FIT!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News