இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்

20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2022, 08:23 PM IST
  • இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்
  • விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படுகிறார்
  • அயர்லாந்து செல்லும் இந்திய அணி
இந்திய அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம் title=

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு எஞ்சியிருந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த அணியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் செல்ல இருக்கிறார். அந்த தொடரை முடித்தவுடன் இந்தியா திரும்பும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணியுடனான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

மேலும் படிக்க | ’என் கேரியர் 2007-ல் முடிந்திருக்கும்’ சேவாக் பகீர் தகவல்

இந்த தொடரின்போது அயர்லாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அணிக்கு பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தற்போஉ உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அயர்லாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண் செல்வார் எனத் தெரிவித்தார். 

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக விவிஎஸ் லக்ஷமண் இருக்கிறார். அயர்லாந்து செல்லும் அணி அறிவிக்கப்பட்ட பிறகு அந்த அணியுடன் அவர் இணைய இருக்கிறார். இதற்கு முன்னதாக, இதேபோன்று இந்திய அணிக்கு இரு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்தபோது, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அப்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த டிராவிட் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு சென்றது. ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட மூத்த வீரர்களும் இளம் வீரர்களும் கலந்த அணியாக அது இருந்தது. 

விவிஎஸ் லக்ஷ்மண் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இருந்தார்.

மேலும் படிக்க | அர்ஜுனை வெளியிலேயே உட்கார வைத்த MI அணி- மகனைப் பற்றி சச்சின் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News