ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சர்பிரைஸாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அக்ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர்.
ஓபனிங் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் ஓபனிங் இறங்கியது முதல் அதிரடியாக விளையாடியதுடன், விக்கெட் பறிகொடுக்காமலும் இருந்தனர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து அடித்தனர். மற்ற பந்துகளை அழகாக சிங்கிள் விளையாடி ஆப்கானிஸ்தான் பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் இருவரும் அரைசதம் அடித்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல், 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு பின் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து, அடுத்த பந்தில் போல்டாகி வெளியேறினார்.
மேலும் படிக்க | Asia Cup2022: விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை
மிடில் ஆர்டரில் ரிஷப் பன்ட் களமிறங்க, விராட் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு மைதானத்தில் வாண வேடிக்கைகளைக் காட்டினார். பந்துகளை சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் விளாசிய விராட் கோலி, 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். ஏறத்தாழ 3 ஆண்டுகளாக ஒரு சர்வதேச சதத்தை கூட பதிவு செய்யாமல் கடும் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருந்த அவர், இந்த விமர்சனங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்தார். 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 6 மெகா சிக்சர்களும் அடங்கும். ரிஷப் பன்ட் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெடுகளை மட்டுமே இழந்து 212 ரன்களை குவித்தது.
King Kohli is back and back. He is bloody good. What a player. pic.twitter.com/zoWS6Haiw9
— Johns. (@CricCrazyJohns) September 8, 2022
முதல் இன்னிங்ஸூக்குப் பிறகு பேசிய விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமான காலமாக இருந்ததாக தெரிவித்தார். இந்த காலத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு தன்னுடைய இந்த சதத்தை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்த பிளேயர் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ