இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 553 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மிட்செல் 190 ரன்களும், டாம் பிளண்டல் 106 ரன்களும் எடுத்தனர். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் படிக்க | ENG vs NZ: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஜோ ரூட் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினார். 128 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 539 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் நாட்டிஹாம் டெஸ்ட் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
Nice gesture from Joe Root, signing the bat of a young cricket fan during the Tea break on Day 3.pic.twitter.com/SA8u0UbaOl
— (@CricCrazyJohns) June 14, 2022
2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், தற்போது வரை 238 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சம் போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், டீ டைமின்போது சிறுவனுக்கு அவனுடைய பேட்டிங் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். இதனால் சிறுவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | IND vs SA: வாழ்வா? சாவா? போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR