நட்சத்திர வீரர் "விராட் கோலி" பயிற்சியாளர் பதவிக்கு வெட்டோரி பெயரை பிசிசிஐயிடம் பரிந்துரைத்தார்.

Last Updated : May 11, 2016, 11:41 AM IST
நட்சத்திர வீரர் "விராட் கோலி" பயிற்சியாளர் பதவிக்கு வெட்டோரி பெயரை பிசிசிஐயிடம் பரிந்துரைத்தார். title=

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியுடன் ஜிம்பாப்வேவை சேர்ந்த டன்கன் பிளட்சர் பதவி காலம் முடிந்தது. அதன் பிறகு ரவிசாஸ்திரி தான் அணியை வழிநடத்தி செல்கிறார். இதுவரை பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் நட்சத்திர வீரர் டிராவிட்டை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கசிந்தன.

இப்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் வெட்டோரி பெயரை விராட்கோலி பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதைக்குறித்து அதிகார பூர்வமான தகவல் எதுவும் பிசிசிஐ தரப்பில் இருந்து வரவில்லை

Trending News