இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் இயான் பெல் இன்று (ஏப்ரல் 11) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ஒரு நாள் அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் அனைத்து வடிவங்களிலும் ஒரு சிறந்த வீரராக இருந்தார் பெல். தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7727 ரன்களை அடித்துள்ளார் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 5416 ரன்களை அடித்துள்ளார்.
மேலும் படிக்க | KKR vs DC: முதல் ஓவரில் அடுத்தடுத்து ரிவ்யூ - ரஹானேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
பெல் இந்தியாவிற்கு எதிராக அதிக வெற்றியை பெற்று தந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக 1343 ரன்களுக்கு சராசரியாக 41.96 எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோரான 235 ரன்களும் இந்தியாவுக்கு எதிராக வந்தது தான். பெல் 2011-ல் MS தோனி தலைமையிலான டெஸ்ட் அணிக்கு எதிராக ஒரு மறக்கமுடியாத தொடரைக் கொண்டிருந்தார். 84 சராசரியில் 6 இன்னிங்ஸ்களில் 504 ரன்கள் குவித்தார். 2011 டெஸ்ட் போட்டியில், பெல் இந்திய பந்து வீச்சாளர்களை நாட்டிங்ஹாமிலும் நாலாபுறமும் சிதறடித்தார். அந்த போட்டியில் பெல் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 150+ ஸ்கோரை நோக்கி செல்லும் போது பெல் அவுட்டாக அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
3வது நாள் தேநீர் இடைவேளைக்கு முன், அசாதாரண சூழ்நிலையில் பெல் ரன் அவுட் ஆனார். இயோன் மோர்கன் அடித்த ஷாட் பவுண்டரி லைனை எட்டியதாகக் கருதி, பெல் கிரீஸின் மறுமுனையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, இந்திய பீல்டர்கள் அவரை ரன் அவுட் செய்தனர். மூன்றாவது நடுவரும் இந்தியாவுக்குச் சாதகமாக முடிவெடுத்தார், பெல் 137 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தோனி தலைமையிலான டீம் இந்தியா, தேநீர் இடைவேளைக்குப் பிறகு அவரைத் திரும்ப அழைக்க முடிவு செய்தது, ஏனெனில் பெல் பவுண்டரி சென்று விட்டதாக எண்ணியே வெளியே நின்றார். தோனியின் இந்த முடிவு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது. தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது.
2011-ல் இந்தியா இங்கிலாந்தில் மறக்க முடியாத சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. சுற்றுப்பயணத்தில் ஒரு வெற்றியை கூட இந்திய அணி பதிவு செய்யவில்லை. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமையிலான இங்கிலாந்தால் இந்திய அணியினர் ஒயிட்வாஷ் செய்யப்பட்டனர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இழந்தனர்.
மேலும் படிக்க | சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR