பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்திலேயே பல சுவாரஸ்யங்களும் அதிர்ச்சி வெற்றிகளும் கால்பந்து ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, அர்ஜெண்டினா அணி சவுதி அரேபியாவிடம் தோல்விடைந்ததை கால்பந்து ரசிகர்களால் நம்ப முடியவில்லை. கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸி இருக்கும் அர்ஜெண்டினா அணியே வெற்றி பெறும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில், அத்தனை பேருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சவுதி அரேபியா.
மேலும் படிக்க: ரசிகர் செல்போனை தட்டிவிட்ட ரொனால்டோ... 2 போட்டிகளில் விளையாட தடை!
இந்த அதிர்ச்சி முடிவதற்குள் மற்றொரு சாம்பியன் அணியான ஜெர்மனியை பந்தாடியது ஜப்பான். கால்பந்து உலகில் கத்துகுட்டி அணிகளாக பார்க்கப்படும் அணிகள், பலம் வாய்ந்த அணிகள் வீழ்த்துவது கத்தார் உலக கோப்பை மீதான பேரார்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால், கட்டணம் செலுத்தியாவது கால்பந்து போட்டிகளை பார்க்க வேண்டும் என முனைப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் கால்பந்து ரசிகர்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வீதிக்கு வீதி பேனர்களை வைத்தும், வீடுகளை வாங்கியும் கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
— Mano Thangaraj (@Manothangaraj) November 24, 2022
தமிழ்நாட்டிலும் குறிப்பிடத்தகுந்தளவுக்கு கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசே ஒரு சூப்பரான ட்ரீட்டை கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை தமிழக அரசு கேபிளில் இலவசமாக பார்க்கலாம். இந்த அறிவிப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த டிவிட்டர் பதிவில், கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. கத்தாரில் நடைபெறும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை அரசு வழங்கியிருக்கும் செட்டாப் பாக்ஸில் ஸ்போர்ட்ஸ் 18 என்ற சேனல் மூலம் இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: FIFA Worldcup 2022: கத்தாரில் இதையெல்லாம் செய்தால் சிறை தண்டனையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ