Olympics: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டியில் "ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியினை எறிந்து தங்கம் வென்று  சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2021, 10:23 PM IST
Olympics: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து! title=

சென்னை: ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டியில் "ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியினை எறிந்து தங்கம் வென்று  சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு பிரதமர் ,குடியரசுத்தலைவர்,அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் தங்கமகன் "நீரஜ் சோப்ராவிற்கு வந்த வண்ணம் உள்ளன.

ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு தமிழக முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்: இந்திய விளையாட்டு வரலாற்றில் இந்த நாள் ஒரு மகத்தான நாள் தடகளப் போட்டிகளில் தங்கம் வெல்லும் இந்தியாவின் 120 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்த "தங்கமகன் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

Also Read | Tokyo Olympics: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

நீங்கள் நூறு கோடி இந்தியர்களின் இதயங்களில் ஒரு புதிய "நம்பிக்கையுணர்வை விதைத்துள்ளீர்கள். உண்மைலேயே நீங்கள் நாட்டின் நாயகன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.!

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் இந்தியா, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் (Olympic Games) 47 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது வரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப் பதங்களுடன் இந்தியா 47 ஆவது இடத்தில் உள்ளது. 

நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகை அளிக்கப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது. 

ALSO READ: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News