பல தரப்பு கோரிக்கைகளுக்கு பின்னர் IPL 2019 போட்டி நேரம் மாற்றம்?

IPL 2019 தொடரின் ப்ளே-ஆப் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 27, 2019, 08:37 PM IST
பல தரப்பு கோரிக்கைகளுக்கு பின்னர் IPL 2019 போட்டி நேரம் மாற்றம்? title=

IPL 2019 தொடரின் ப்ளே-ஆப் போட்டிகள் இரவு 7.30 மணிக்கு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

உச்சநீதிமன்ற பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட IPL நிர்வாக குழு, எதிர்வரும் ப்ளே ஆப் சுற்று போட்டிகளின் நேரத்தை மாற்றிய அமைப்பது தொடர்பாக இன்று கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் ப்ளே ஆப் சுற்று போட்டிகளின் நேரத்தை தற்போது நடைபெறும் 8.00 மணிக்கு பதிலாக 7.30 அல்லது 7.00 மணிக்கு துவக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. நிர்வாகிகள் குழுவின் அடுத்த கூட்டம் வரும் மே 3-ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு பின்னர் உறுதியான முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைப்பெற்ற வரும் IPL 2019 தொடரின் ப்ளே ஆப் சுற்றுகள் வரும் மே 7-ஆம் நாள் துவங்கி நடைபெறவுள்ளது. IPL 2019 தொடரின் லீக் போட்டிகள் தற்போது வார நாட்களில் 8 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 4 மற்றும் 8 மணிக்கும் நடைப்பெற்று வருகிறது.

இரவு 8 மணிக்கு துவங்கும் போட்டிகள் நள்ளிரவு முடிகிறது. இதனால் பனி விழுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகி பந்து வீசும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பனி விழுதல் காரணங்களால் பந்து வீசும் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்தக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் ஷர்மா, பஞ்சாப் அணி தலைவர் அஷ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் ரஹானே ஆகியோருக்கு பந்துவீச அதிக நேரம் எடுத்தக்கொண்டமைக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுமட்டும் அல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ப்ளே ஆப் சுற்று போட்டிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக துவங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. பொதுவாக போட்டிகள் நல்லிரவு முடிகின்ற போதிலும், போட்டியில் பரிசளிப்பு விழா முடிய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இக்காரணங்களால் போட்டியை முன்கூட்டியோ தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Trending News