இந்த 6 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் திருமணம் ஆகாமலேயே தந்தையானவர்கள்

இந்த கிரிக்கெட் வீரர்கள் திருமணத்திற்கு முன்பே தங்கள் காதலியுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து தந்தையாகியுள்ளனர். இந்த தனித்துவமான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஒரு இந்தியரும் இடம்பெற்றுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 23, 2021, 04:42 PM IST
  • திருமணத்திற்கு முன்பே ஹர்திக் பாண்டியா தந்தையாகிவிட்டார்
  • DNA பரிசோதனையில் இந்தக் குழந்தை இம்ரான் கானுக்கு தான் சொந்தம்
  • இருவரும் லிவிங் டுகெதர் உறவில் இருந்தனர்.
இந்த 6 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் திருமணம் ஆகாமலேயே தந்தையானவர்கள் title=

புதுடெல்லி: காதலில் விழுந்து திருமணத்திற்கு முன்பே தந்தையாகும் பாக்கியத்தை அடைந்த கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர். இந்த கிரிக்கெட் வீரர்கள் கூட திருமணத்திற்கு முன்பே தங்கள் காதலிகளுடன் உறவாடி தந்தையாகியுள்ளனர். இந்த தனித்துவமான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஒரு இந்தியரும் இடம்பெற்றுள்ளார். திருமணத்திற்கு முன்பே தந்தையான கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. ஹர்திக் பாண்டியா:

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), திருமணத்திற்கு முன்பே தந்தையானார். ஹர்திக் பாண்டியாவுக்கும் பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும் (Natasha Stankovic) ஜனவரி 1, 2020 அன்று துபாயில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 30 ஜூலை 2020 அன்று, ஹர்திக் பாண்டியா தனது காதலி கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் தந்தையாகப் போவதாகவும் தெரிவித்தார். ஹர்திக் பாண்டியா தனது குழந்தைக்கு "அகஸ்தியா" என்று பெயரிட்டுள்ளார்.

Hardik Pandya

2. ஜோ ரூட்:

இந்த பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் (Joe Root) இடம் பெற்றுள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் தந்தையானவர் ஜோ ரூட் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட என்பது அனைவருக்கும் தெரியும். ஜோ ரூட் 2014 ஆம் ஆண்டு முதல் தனது காதலியான கேரி கோர்ட்டலுடன் (Carrie Cortel) டேட்டிங் வாழ்கையில் பயணித்து வந்தார். இருவருக்கும் மார்ச் 2016 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. உலகக் கோப்பை டி20 க்கு முன்பு, ஜோ ரூட் திருமணம் செய்யாமல் தந்தையானார். ஜோ ரூட்டின் மகனின் பெயர்  "ஆல்ஃபிரட்" அவர் 7 ஜனவரி 2017 அன்று பிறந்தார். இதைத் தொடர்ந்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.

Joe Root

ALSO READ |  நடாசா-க்கு முன் ஹர்திக் பாண்டியா ஜாலியா ஊர் சுற்றிய 6 காதலிகள் யார் தெரியுமா?

3. டேவிட் வார்னர்:

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (David Warner) திருமணம் செய்து கொள்ளாமல் தந்தையானார். 2014 இல், டேவிட் வார்னரின் காதலி கேண்டிஸ் (Candice) தனது முதல் மகளைப் பெற்றெடுத்தார். 2015 ஆம் ஆண்டில், டேவிட் வார்னர் கேண்டீஸை மணந்துக் கொண்டார். வார்னருக்கு ஐவி, இண்டி மற்றும் இஸ்லா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

David Warner

4. இம்ரான் கான்:

தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானும் (Imran Khan) திருமணம் செய்து கொள்ளாமல் தந்தையானவர். சீதாவுக்கும் இம்ரானுக்கும் இடையே (Sita and Imran's relationship) 1987-88ல் ஆரம்பித்த உறவு 1991-ல் இருவரும் ஒன்றாக நெருங்கிப் பழகினார்கள். 1992-ல் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது இம்ரானின் குழந்தை, ஆனால் முதலில் இதை மறுத்த இம்ரான், பின்னர் டிஎன்ஏ பரிசோதனையில் இந்தக் குழந்தை இம்ரான் கானுக்கு தான் சொந்தம் என்பது தெரிய வந்தது குறிபிடத்தக்கது.

Imran Khan

ALSO READ |  Chris Gayle: இடுப்பு துண்டை கழற்றிய Chris Gayle மீது பாலியல் குற்றச்சாட்டு!

5. விவியன் ரிச்சர்ட்ஸ்

1980-ல் இந்தியா வந்த ரிச்சர்ட்ஸ் (Vivian Richards), இந்தியாவின் பிரபல நடிகை நீனா குப்தாவை (Actress Neena Gupta) சந்தித்தார். இருவரது உறவும் நீண்ட நேரம் நீடித்தது. இருவரும் லிவிங் டுகெதர் உறவில் இருந்தனர். 1989 இல், நீனா ஒரு மகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு "மசாபா" என்ற பெயர் சூட்டினர்.

Vivian Richards

6. கிறிஸ் கெய்ல்

திருமணம் ஆகாமலேயே தந்தையாகிவிட்ட உலகின் அதிவிரைவு பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்லும் (Chris Gayle) இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​அவரது காதலி நடாஷா பேரிட்ஜ்க்கு (Natasha Barridge) பெண் குழந்தை பிறந்தது. கிறிஸ் கெயிலின் பெயர் தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தாலும், இந்த சாதனையையும் கிறிஸ் கெய்ல் செய்துள்ளார்.

Chris Gayle

ALSO READ | "நேருக்கு நேர் பேசுங்கள்" - ஷாகித் அப்ரிடி கருத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News