தினேஷ் கார்த்திக் அறிமுகமான போது இந்த 4 ஐபிஎல் நட்சத்திரங்கள் பிறக்கவே இல்லை!

கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2024, 12:46 PM IST
  • 20 ஆண்டுகளாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்.
  • 2004ல் இந்தியாவிற்காக அறிமுகம் ஆனார்.
  • இந்த ஆண்டுடன் ஓய்வு பெற உள்ளார்.
தினேஷ் கார்த்திக் அறிமுகமான போது இந்த 4 ஐபிஎல் நட்சத்திரங்கள் பிறக்கவே இல்லை! title=

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள மற்ற லீக் கிரிக்கெட்டை ஒப்பிடும் போது திறமையான கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் உருவாக்கி வருகிறது. மேலும் அவர்களது திறமைக்கான அங்கீகாரத்தையும் வழங்குகிறது.  இந்த ஆண்டு ஐபிஎல் 2024 சீசனில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத சில நாக்களை இந்த ஆண்டு கொடுத்துள்ளனர்.  தற்போது நடைபெற்று ஐபிஎல் 2024 போட்டிகளில் விளையாடி வரும் சில வீரர்கள் எதிர்காலத்தில் ஒரு நட்சத்திர வீரராக உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது.  அதே நேரத்தில் ஐபிஎல் தொடங்கிய 17 சீசன்களாக விளையாடி வரும் சில மூத்த வீரர்களும் உள்ளனர்.  

மேலும் படிக்க | ஐபிஎல் 2024: தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது எப்படி? பிக் சீக்ரெட் இதுதான்

ஐபிஎல்லில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் சில வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். 2008 முதல் தற்போது வரை ஐபிஎல்லில் போட்டியில் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இதுவரை ஆறு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.  அப்போது இருந்து கடந்த 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக்.  இந்நிலையில், தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனா போது பிறக்காத, இந்த சீசனில் விளையாடி வரும் 4 இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (KKR) - ஜூன் 5, 2005

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் இளம் வீரர் ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, டெல்லிக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.  அந்த போட்டியில் 166.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 54 ரன்கள் அடித்தார். மேலும் இதுவரை விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் 85 ரன்கள் அடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி பிறந்துள்ளார். 

நூர் அகமது (GT) - ஜனவரி 3, 2005

ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ஐபிஎல்லில் கடந்த சீசனில் இருந்து விளையாடி வருகிறார்.  குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2023 ஐபிஎல்லில் அறிமுகமானார் நூர் அகமது. ரசித் கானுக்கு அடுத்தபடியாக சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வளம் வருகிறார். இந்த ஆண்டும் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக அறிமுகமான சில மாதங்களுக்குப் பிறகு நூர் அகமது பிறந்துள்ளார். நூர் அகமது 17 இன்னிங்சில் 19 ஐபிஎல் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

குமார் குஷாக்ரா (DC) - அக்டோபர் 23, 2004

குமார் குஷாக்ரா ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். அதன் பின்பு இவரை பற்றி பலரும் இணையத்தில் தேடினர். இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் குமார் குஷாக்ரா தனது பவர்ஹிட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிராக போட்டியில் களமிறங்கினார் குமார் குஷாக்ரா. ஆனால் அந்த போட்டியில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு மாதத்திற்குப் பிறகு குமார் குஷாக்ரா பிறந்துள்ளார்.  

க்வேனா மபாகா (MI) - ஏப்ரல் 8, 2006

தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா ஐபிஎல் 2024ல் விளையாடும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ஐசிசி யு19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இவர் அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆனால் ஐபிஎல்லில் முதல் போட்டியே அவருக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.  ஹைதராபாத் அணிக்கு எதிரான அவரது முதல் போட்டியில் 4 ஓவர்களில் 67 ரன்களை விட்டுக்கொடுத்தார். தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக அறிமுகமான ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு க்வேனா மபாகா பிறந்துள்ளார்.

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு - அது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News