டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்கொள்ளும் சவால்கள் இதுவரை எந்தவொரு ஒலிம்பிக் போட்டிகளும் சந்திக்காதவை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (International Olympic Committee) தலைவர் தாமஸ் பாக் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் டோக்கியோவிற்கு வந்tதுக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில் நேற்று (வியாழக்கிழமை, ஜூலை 08, 2021) ஜப்பான் வந்தடைந்தார் ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach).
Also Read | COVID Olympics: பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள்; எமர்ஜென்சியை அறிவித்தது ஜப்பான்
பிராங்பேர்ட்டில் (Frankfurt, Germany) இருந்து ஹனெடா விமான நிலையத்திற்கு வந்த அவர், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். டோக்கியாவுக்கு வரும் சர்வதேச அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய பிளேபுக் வழிகாட்டுதல்களைப் (Playbook guidelines) பின்பற்றுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதால் ஜப்பானில் கொரோனா வைரஸின் புதிய அலை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.
தடுப்பூசி போட்டு, கொரோனாவுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை தாமஸ் பாக் பெற்றிருந்தாலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்தாலும் அவர் ஹனெடா விமான நிலையத்தில் COVID-19 சோதனையை மேற்கொண்டார். பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்த பிறகு தான், அவர் ஹோட்டலுக்குச் சென்றார்.
"இறுதியாக, நாங்கள் இங்கே இருக்கிறோம், நீண்ட காலமாக நாம் அனைவரும் ஏங்கிக் கொண்டிருந்த தருணம் இது. இப்போது நான் தடகள வீரராக உணர்கிறேன்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (International Olympic Committee) தலைவர் தாமஸ் பாக் தெரிவித்தார்.
Also Read | Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?
கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளை, தற்போது நடத்துவதில் உள்ள சவால்களைப் பற்றி அவர் பேசினார். நாம் எதிர்கொள்ளும் சவால்கள் முன்னோடியில்லாதவை தான், ஆனால் வாய்ப்புகளும் அதுபோலத்தான், இதுவரை இல்லாத புது வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் எது எப்படியிருந்தாலும், இந்த விளையாட்டுகளை பாதுகாப்பாக நடத்துவதே நமது முதல் முன்னுரிமை, அந்த விதத்தில் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்.
எல்லா நடவடிக்கைகளிலிருந்தும், எல்லா நிபுணர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அதன்படி நாங்கள் முடிவுகளை மேற்கொள்கிறோம் விளையாட்டு வீரர்கள் பிரகாசிக்க வேண்டிய தருணம் இது, இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதையும் ஒன்றிணைத்து, ஜப்பானில் இருந்து உலகிற்கு இந்த செய்தியை அனுப்ப இது ஒரு சிறப்பு தருணமாக இருக்கும்.
Also Read | Euro 2020: 55 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் யூரோ கால்பந்து இறுதியில் இங்கிலாந்து
ஐ.ஓ.சி தலைவர் தொலைதூரத்தில் மட்டுமே செயல்படுவார். மாலையில், ஐ.ஓ.சி, சர்வதேச பாரா-ஒலிம்பிக் கமிட்டி (International Paralympic Committee), டோக்கியோ 2020 அமைப்புக் குழு, ஜப்பான் அரசு மற்றும் டோக்கியோ பெருநகர நிர்வாகம் என ஐந்து அமைப்புகள் நடத்தும் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவார். அந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.
டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்றும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு வருகை தரும் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் டோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழுவுடன் நேரடியான சந்திப்பு ஜூலை 12 தேதியன்று நடைபெறும்.
மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக வருபவர்கள் அனைவருமே, பிளேபுக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான விதிகளின்படியே நடந்துக் கொள்ளவேண்டும். ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஜூலை 16 ஆம் தேதி ஹிரோஷிமாவுக்கு தாமஸ் பக் செல்வார்.
ஐ.ஓ.சி நிர்வாக சபைக் கூட்டம் டோக்கியோவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும், அதைத் தொடர்ந்து 138 வது ஐ.ஓ.சி அமர்வு ஜூலை 20 அன்று நடைபெறும்.
Also Read | ஜூன் மாத ஐ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலுக்கு 2 இந்திய வீராங்கனைகள் பரிந்துரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR