ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை இரண்டு மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. நடப்பு தொடரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைக்க உள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் ரசிகர்களிடையே நடப்பு சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகள் பங்கேற்றாலும் எப்போதும் லைம் லைட்டில் இருந்து வரும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இதேபோல் இந்தியா, வெளிநாடு என நூற்றுக்கணக்கான நட்சத்திர வீரர்கள் பங்கேற்றாலும் அனைவரின் கவனத்தையும் எப்போதும் தன் மீது நிலைநிறுத்திக்கொண்டிக்கும் ஒரு வீரர் என்றால் அவர் நம்ம தல தோனி மட்டும் தான். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளிட்டுள்ளது.
மேலும் படிக்க | IPL2022: தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு இதுதான்..!
Super Velli! #WhistlePodu #Yellove pic.twitter.com/BqXBgbK819
— Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2022
மேலும் படிக்க | MS Dhoni: தல தோனிக்கு எப்படியெல்லாம் வருமானம் வருது தெரியுமா?
கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிதால் தோனி குறித்து பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் நடப்பு சீசனில் பதிலடி கொடுக்கும் வகையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையின் கீழ் விளையாடும் வீரர்கள், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க உள்ளனர். பயிற்சியின்போது ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி லைன்க்கு விளாசும் தோனியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR