Thailand Open 2023: இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால்! பிவி சிந்து தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் பிவி சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்! லக்‌ஷ்யா சென், சாய்னா நெஹ்வால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 31, 2023, 09:25 PM IST
  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள்
  • பிவி சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்
  • லக்‌ஷ்யா சென், சாய்னா நெஹ்வால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்கள்
Thailand Open 2023: இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால்! பிவி சிந்து தோல்வி title=

Thailand Open 2023: புதன்கிழமை (2023 மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் 2023 பேட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென், முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் சூ வெய்யை எதிர்த்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் , தைவான் வீரர் சூ வெய் வாங் ஆகியோர் மோதினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் சுற்றில் பின் தங்கிய லக்சயா சென் அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். 21-23 , 21 -15 , 21 - 15 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார்.

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிவி சிந்து, தாய்லாந்து ஓபன் 2023 பேட்மிண்டன் போட்டிகளின் முதல் சுற்றில் தோல்வியடைந்தார். பிவி சிந்துவை கனடாவின் மிச்செல் லி 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மேலும் படிக்க | CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர்

மூன்றாவது ஆட்டத்தில் 10 நேர் புள்ளிகளைப் பெற்ற பிறகு, இந்திய வீராங்கனை வெற்றி பெற்றுவிடுவார் என்று தோன்றிய நிலையில், ஒரு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்த ஆட்டத்தில் பிவி சிந்து இறுதியில் தோல்வியைத் தழுவினார்.  

மற்றுமொரு மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், கனடாவின் வென் யூ ஜாங்கை நேர் செட்களில் வீழ்த்தி அசத்தினார். கனாடாவின் வென் யூ ஜாங்கை 21-13, 21-7 என்ற கணக்கில் தோற்கடித்த சாய்னா இரண்டாவது சுற்றில் சாலிஹாவுடன் இணைந்தார்.

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டிகளில் ஆடவர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென், முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும், 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் சூ வெய்யை எதிர்த்து  வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

மேலும் படிக்க | CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே! 

ஆனால், கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் தோற்று வெளியேறினார். முதல் கேமை 21-8 என்ற செட் கணக்கில் இழந்த ஸ்ரீகாந்த், இரண்டாவது கேமில் 21-16 என வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரணாய்யிடம் தோல்வியடைந்த வெங், ஸ்ரீகாந்துக்கு எதிரான மூன்றாவது கேமை 21-14 என வென்று 21-8, 16-21, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

முன்னதாக, இந்தியாவின் கிரண் ஜார்ஜ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் தோல்வியடைந்தார். மலேசியா மாஸ்டர்ஸ் மற்றும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டிகள் முடிவடைந்த நிலையில், உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2023 போட்டியைத் தொடங்கியது.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனின் 11வது போட்டி மே 30 செவ்வாய்க் கிழமை முதல் ஜூன் 4 வரை பாங்காக்கில் நடைபெறுகிறது. இந்தோனேசியா மாஸ்டர்ஸ் மற்றும் மலேசியா மாஸ்டர்ஸ், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகளுக்குப் பிறகு, இந்த சீசனின் சூப்பர் 500 பாட்மிண்டன் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? தோனி சொன்ன முக்கிய பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News