INDvsWI: ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது!

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 14 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2018, 06:08 PM IST
INDvsWI: ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது! title=

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 14 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கொட் சௌராஸ்ட்ரா கிரிக்கட் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட 4-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெறுகிறது. 

இதனையடுத்து வரும் வரும் அக்டோபர் 21-ஆம் நாள் முதல் ஒருநாள் தொடர் துவங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி தரப்பில் வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 14 வீரகள் கொண்ட பெயர் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலின்படி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கோலி தலையிலான அணியில் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, MS டோனி, ரிசாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாக்கூர், KL ராகுல் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாளை நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!

Trending News