புதுடெல்லி: 2021 டி 20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியில், பாகிஸ்தான் அணி நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் போட்டியிடுவதால், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தப் போட்டியின் மீது உள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியவில்லை. இதற்கிடையில், இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்று சிலர் கணித்துள்ளனர்.
இந்த அணி போட்டியில் வெற்றி பெறும்
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் ஐசிசி டி 20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில், பாகிஸ்தான் இந்தியாவை (Ind vs Pak) வீழ்த்தி 5-1 என்ற புதிய சாதனையை படைக்கும் என்று நம்புகிறார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் அதிக அழுத்தம் இருப்பதாகவும், இந்த அழுத்தத்தை தாங்கும் வீரர்கள் வெற்றி பெற்று அணியை வெல்லச்செய்வதாகவும் அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக துபாயில் விளையாடும்.
பாகிஸ்தான் வெல்லும்
பாகிஸ்தானின் கண்ணோட்டத்தில், இந்த டி 20 உலகக் கோப்பையில் 5-0 என்ற இந்தியா பாகிஸ்தான் போட்டிக்களுக்கான கணக்கீடு 5-1 ஆக மாறும் என்று நம்புவதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் கூறினார். 2009 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக இருந்த யூனிஸ் கான், இந்திய அணியில், எம்எஸ் தோனி (MS Dhoni) ஒரு ஆலோசகராக இருப்பது, இந்த மெகா நிகழ்வில் இந்தியாவுக்கு மிகப் பெரிய கூடுதல் பலமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தோனி. அணியின் சூழலை அமைதிப்படுத்தவும், உயர் அழுத்த போட்டிகளில் வீர்ரகளின் பதட்டத்தை அமைதிப்படுத்தவும் தோனியின் வழிகாட்டுதல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.
ALSO READ: T20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் கதாநாயகர்கள் யார்?
கோலிக்கு பாராட்டு
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை (Virat Kohli) பாராட்டினார். அவருக்கு அழுத்தம் அதிகம் உள்ள போட்டிகளின் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியும். விராட் கோலி ஒரு சிறந்த வீரர், அவர் தொடர்ந்து செயல்படும் விதம் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இன்றுவரை பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை
டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இதுவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 24-ம் தேதி இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு போட்டி நடந்தது. அதில் இந்தியா பாகிஸ்தானை பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஒருநாள் உலகக் கோப்பையிலும், பாகிஸ்தானை விட இந்தியாவின் சாதனை நன்றாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றிபெறவில்லை.
ALSO READ: டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அமைவாரா வருண் சக்கரவர்த்தி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR