இங்கிலாந்து பேட்மிண்டன்; முதல் சுற்றில் வெளியேறினார் PV சிந்து!

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்!

Last Updated : Mar 6, 2019, 08:02 PM IST
இங்கிலாந்து பேட்மிண்டன்; முதல் சுற்றில் வெளியேறினார் PV சிந்து! title=

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்!

All England Open Badminton 2019 தொடர் பர்மிங்ஹாம்-ல் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றுப் போட்டியில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூன் - ஐ எதிர்த்து விளையாடினார்.

16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த பி.வி.சிந்து, இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி 22-20 என்ற புள்ளியில் செட்டை கைப்பற்றினார்.  பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் பி.வி. சிந்து 18-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சுமார் 80 நிமிடங்கள் நீடித்த இப்போட் பார்வையாளர்களை இறுக்கையின் முனையில் அமர வைத்தது.

Trending News