இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு, இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. காயம் காரணமாக பல முன்னணி தொடர்களில் இருந்து தொடர்ச்சியாக விலகியிருக்கும் அவர், இப்போது 20 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்பதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் இன்னும் குணமாகாததால் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து முழுமையாக விலகியிருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியான மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் அவர், உலகக்கோப்பைக்கு முன்பாக உடல் தகுதியை எட்டிவிட வேண்டும் என்பதற்காக முயற்சி எடுத்து வருகிறார்.
தென்னாப்பிரிக்க தொடரில் விலகல்
முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். ஏற்கனவே காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தென்னாப்பிரிக்க தொடரில் அணிக்கு திரும்பினார். ஆனால், அவரால் ஒரு போட்டியில் கூட களத்தில் இறங்க முடியவில்லை. பும்ராவின் உடல்தகுதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டு, முகமது சிராஜ் மாற்று வீரராக இந்திய அணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | உலகக்கோப்பை கனவு 'அம்போ' - இந்திய அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்!
சவுரவ் கங்குலி கொடுத்த அப்டேட்
விரைவில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அவர், அந்த தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடமும் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், உலகக்கோப்பை போட்டிக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், பும்ரா பங்கேற்பது குறித்து முடிவெடுக்க காலம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
அடிக்கடி காயத்தில் சிக்கும் பும்ரா
2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானதில் இருந்து பலமுறை காயத்தால் அவதிப்பட்டுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. 2018 ஆம் ஆண்டு அவருக்கு கட்டை விரல் காயம் ஏற்பட்டது. 2019 ஆம் ஆண்டு எலும்பு முறிவு காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியிருந்தார். மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இப்போதும் காயத்தால் அவதிப்பட்டு அவர் குணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் பும்ரா குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | வயசானாலும்... அது மட்டும் மாறல - சின்ன தல ரெய்னாவின் மிரட்டல் கேட்ச்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ