ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகினரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஏறத்தாழ தோற்றுவிட்டோம் என கிரிக்கெட் அணியினரே நினைதுக் கொண்டிருந்த சமயத்தில் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடி, சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதுடன், நடப்பு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதிக்கான இடத்தையும் உறுதி செய்தார். 91 ரன்களுக்குள் 7 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா. அப்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறாது, ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைக்கப்போகிறது என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.
ஆனால் வரலாறு படைத்தது மேக்ஸ்வெல். உலக கோப்பையில் 201 ரன்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், சேஸிங்கில் கிரிக்கெட்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற மகத்தான சாதனையும் மேக்ஸ்வெல்லிடம் வந்திருக்கிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார் மேக்ஸ்வெல். அவரின் இந்த ஆட்டத்தைப் பார்த்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரே பிரம்மித்துப் போய் உள்ளார். இப்படியொரு ஆட்டத்தை என் வாழ்நாளில் பார்த்தில்லை, என் கிரிக்கெட் வாழ்நாளில் நான் இதுவரை பார்த்த மிகச் சிறந்த ஆட்டம் இதுதான் என மேக்ஸ்வெல்லுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
டிவிட்டரில் இது குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவில், " அதிக அழுத்ததுக்கு இடையே அற்புதமாக ஆட்டத்தை மேக்ஸ்வெல் வெளிப்படுத்தியிருக்கிறார். என் வாழ்நாளில் நான் பார்த்த மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்." என கூறியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மார்டின் கப்தில் மற்றும் கிறிஸ் கெயில் மட்டுமே இதுவரை உலக கோப்பையில் 200 ரன்களை அடித்திருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 200 ரன்களை அடித்தவர் மேக்ஸ்வல் தான்.
பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிரம்மிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஓ மை குட்னஸ் மேக்ஸி என வியப்பில் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரைப் போலவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான முகமது கைஃப், ஹர்பஜன் சிங், யுவ்ராஜ் சிங் ஆகியோரும் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் நம்பமுடியாத ஒன்று என கூறியுள்ளனர். இப்படியொரு ஆட்டத்தை எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்திருக்கும் அவர்கள், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டம் இது என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா அணியை சந்திக்க இருக்கிறது.
மேலும் படிக்க | அரையிறுதியில் ஆப்கான்? - சச்சினுக்கு நன்றி சொன்ன இப்ராஹிம் சத்ரான்... ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ