ஐபிஎல் 2021ல் சென்னை அணி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, குவாலிபையர் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இன்று ஐபிஎல் பைனலில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் சென்னை அணி வெற்றிகரமாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருத்ராஜ் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடி குவாலிபையர் 1 போட்டி வரை 603 ரன்கள் அடித்திருந்தார். 626 ரன்களுடன் பஞ்சாப் அணியை சேர்ந்த கேஎல் ராகுல் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பை வைத்திருந்தார். பைனல் போட்டியில் கேல் ராகுலின் ரன்களை கடந்தால் ஆரஞ்சு கேப்பை வெல்லாம் என்ற நிலையில் இருந்தார் ருத்ராஜ்.
இன்று நடைபெற்ற பைனல் போட்டியில் 27 பந்துகளில் 32 ரன்கள் அடித்ததன் மூலம் 635 ரன்களுடன் இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ருத்ராஜ். இந்த சீசனில் மொத்தமாக 16 இன்னிங்ஸ் ஆடிய ருத்ராஜ் 64 பவுண்டரிகள் மற்றும் 23 சிக்ஸர்கள் அடித்து உள்ளார். ஒரு இன்னிங்சில் சராசரியாக 45 ஆவரேஜ் வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால தூணாக தற்போது ருத்ராஜெய் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
ALSO READ இன்று தான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR