LaLiga கால்பந்து லீக்கின் முதல் இந்திய தூதராக ரோஹித் சர்மா!

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ஸ்பெயினின் முதல் பிரிவு கால்பந்து லீக்கின் (லா லிகா) முதல் இந்திய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Dec 12, 2019, 07:23 PM IST
LaLiga கால்பந்து லீக்கின் முதல் இந்திய தூதராக ரோஹித் சர்மா! title=

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ஸ்பெயினின் முதல் பிரிவு கால்பந்து லீக்கின் (லா லிகா) முதல் இந்திய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பினை லாலிங்கா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 32 வயதான தொடக்க வீரரின் படத்தை பேட் மற்றும் கால்பந்துடன் பகிர்ந்து கொண்ட, லாலிங்கா அவரை இந்தியாவின் பிராண்ட் தூதராக வரவேற்றுள்ளது.

இதைப் பிரதிபலிக்கும் வகையில், லாலிகா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜோஸ் அன்டோனியோ கச்சாசா கூறுகையில், நாட்டில் தற்போது கால்பந்து மீது பெரும் பசி இருப்பதாகவும், எனவே நமது தூதர் மிகப்பெரிய பிரபலமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் அவர் மிகவும் புகழ்பெற்ற முகங்களில் ஒருவர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு ரோஹித்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.. மேலும் அவர் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் என்பதினையும் நாம் கருத்தில் கொண்டுள்ளோம் என தெரிவித்திருந்தார்....

"உலகளாவிய கண்ணோட்டத்தில் லாலிகாவுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தை, நாட்டின் துடிப்பு பற்றி நன்கு புரிந்துகொள்ள 2017-ல் நாங்கள் இங்கு வந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்றும் பல தரையிறக்கும் முயற்சிகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு கால்பந்து மீது ஒரு பெரிய பசி உள்ளது என்பது தெளிவாகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா, தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற முகமாக இருப்பதை ஊக்குவிக்கவும், அவர் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் என்பதை வெளிக்காட்டவும் லாலிகா இந்த முடிவு எடுத்துள்ளது. 

களத்தில் மற்றும் வெளியே தனது ஆளுமையில், ரோஹித் லாலிகா தரங்களையும் கொள்கைகளையும் உள்ளடக்குகிறார். லாலிகாவின் முதல் கால்பந்து அல்லாத பிராண்ட் தூதராகவும், இந்தியாவில் எங்கள் பிராண்டின் முகமாகவும் அவரை வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று லா லிகா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மேற்கோளிட்டுள்ளது.

இதற்கிடையில், கால்பந்து எப்போதும் தனது இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்து வருவதாகவும், தான் லாலிகாவின் தூதராக நியமிக்கப்பட்டதற்கு தாழ்மையுடன் இருப்பதாகவும் ரோஹித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோஹித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுடுகையில்., "ஹோலா இந்தியா / எஸ்பானா, உங்களுக்கு தெரியும், கால்பந்து எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, எனவே இந்தச் சங்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் லா லிகாவின் தூதராக பெயரிடப்படுவது மிகவும் தாழ்மையானது. இந்த கூட்டாண்மைக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பேட்ஸ்மேன்களுக்கான ICC ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரோஹித், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது 400 சர்வதேச சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News