IND vs SL: கோலியை முறியடித்து ரோகித் சர்மா உலக சாதனை!

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.   

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2022, 09:49 AM IST
  • கோலி மற்றும் மார்டின் குப்டிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.
IND vs SL: கோலியை முறியடித்து ரோகித் சர்மா உலக சாதனை!  title=

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நேற்று நடைபெற்ற டி20 போட்டியின் போது மேலும் ஒரு புதிய சாதனையை படைத்தார்.  சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித்.   விராட் கோலி மற்றும் மார்டின் குப்டிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.  குப்டில் மற்றும் கோஹ்லி முறையே 3299 மற்றும் 3296 ரன்கள் எடுத்துள்ளனர். 115 இன்னிங்ஸ்களில் குப்டில் மற்றும் கோலியை முந்தி சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார். 

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்

ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பு ரோஹித்திற்கு இந்த சாதனையை நிகழ்த்த 37 ரன்கள் தேவைப்பட்டது.  இந்நிலையில் இந்த சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா.  ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.  முதல் டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.  முதல் 6 ஓவர்களில் 58 ரன்களை அடித்து அசத்தினர்.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முந்தைய போட்டியில் சொதப்பிய கிசன் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் அடித்தார்.  

டி20 போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மா பல சாதனைகள் படைத்து வருகிறார்.  நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதுடன் தொடர்ந்து பத்தாவது போட்டியில் இந்தியா தோல்வி பெறாமல் இருந்து வருகிறது.  ரோஹித் கடந்த வாரம் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், தற்போது இந்திய அணியின் மூன்று வித கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.  "இது ஒரு பெரிய கவுரவம் மற்றும் மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது எப்போதுமே ஒரு பெரிய பொறுப்பு. நான் எதிர்நோக்குவதற்கு நிறைய சவால்கள் உள்ளன, வாய்ப்பு கிடைத்தவுடன், அணிக்கு கேப்டனாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்" என்று செய்தியாளர் சந்திப்பின் போது ரோஹித் கூறினார்.

மேலும் படிக்க | இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? இருவருக்கு இடையே கடும்போட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News