பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை வென்றதன் மூலம் இந்தியா கடந்த 17 ஆண்டுகால ஐசிசி கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனையடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். தற்போது இந்த உலகக் கோப்பையை வென்ற அணியின் மற்றொரு வீரர் டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இனி சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் தனது சமூக ஊடக தளத்தில் டி20 சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
ஜடேஜா ஓய்வு பெற்றார்
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கமாக இருந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருக்கும் பதிவில், "நான் நன்றி நிறைந்த இதயத்துடன் T20 சர்வதேச போட்டிக்கு விடைபெறுகிறேன். ஒரு குதிரையைப் போல, நான் எப்போதும் எனது நாட்டிற்காகவும் மற்ற வடிவங்களிலும் எனது சிறந்ததை பெருமையுடன் அளித்துள்ளேன். இனியும் தொடர்ந்து செய்வேன்." என உருக்கமாக தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.
மேலும் படிக்க | யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா - என்ன மேட்டர்?
டி20 உலகக் கோப்பையில் ஃபார்ம் இல்லை
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2024 இல் ஜடேஜா எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பை வழங்கவில்லை. 5 போட்டிகளில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த போட்டிகளில் முறையே 0, 7, 9*, 17* மற்றும் 2 ரன்களை மட்டுமே எடுத்தார். அதே சமயம் பந்துவீசும்போது கூட அவரால் சிறந்த பந்துவீச்சை கொடுக்க முடியவில்லை. மொத்தப் போட்டியிலும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே அவர் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர்-8 போட்டியில் இந்த விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச வாய்ப்பு கிடைத்தது, ஆனால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. 1 ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார்.
2009 இல் அறிமுகமானார்
இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா, 2009 இல் இந்தியாவுக்காக முதல் டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடினார். கொழும்பில் இலங்கைக்கு எதிராக 20 ஓவர் வடிவத்தில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். இப்போது 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம், தனது 16 ஆண்டுகால நீண்ட வாழ்க்கையை இந்த வடிவத்தில் முடித்துக் கொண்டிருக்கிறார் ஜடேஜா. அவர், இந்தியாவுக்காக 74 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 515 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சை பொறுத்தவரைஜடேஜா மொத்தம் 54 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார்
ஜடேஜா 50 ஓவர் வடிவம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவார். இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜடேஜா தனது 105 இன்னிங்ஸில் 3036 ரன்களை 175 ரன்கள் எடுத்துள்ளார். இதில், நான்கு சதங்கள் மற்றும் 20 அரை சதங்களும் அடங்கும். அதே நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியைப் பற்றி பேசுகையில், ஜடேஜா 197 போட்டிகளில் விளையாடி 13 அரை சதங்களுடன் 2756 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சிறந்த ஸ்கோர் 87 ரன்கள். பந்துவீச்சில் ஜடேஜா இந்த வடிவத்தில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ