IND Vs AUS 1st Test: கும்பிளேவை ஓவர் டேக் செய்து மகத்தான சாதனை படைத்த அஸ்வின்..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை அவர் வசம் வந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2023, 06:09 PM IST
 IND Vs AUS 1st Test: கும்பிளேவை ஓவர் டேக் செய்து மகத்தான சாதனை படைத்த அஸ்வின்..! title=

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார் ரவிசந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியை ஆட்டமிழக்க செய்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இந்திய வீரர்களில் அனில் கும்பிளேவுக்குப் பிறகு 450 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின். விரைவாக 450 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் ரவிசந்திரன் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களம் புகுந்தனர். அவர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்தனர். இதனால் 2 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது.

மேலும் படிக்க | IND VS AUS: கோலி 64 ரன்கள் அடித்தால்... சச்சினின் இந்த சாதனையும் அவுட்!

மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் லபுசேன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் விளையாடியபோதும், அவர்களால் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. ஒரு முனையில் அஸ்வினும், மறு முனையில் ஜடேஜாவும் துல்லியமாக சுழற்பந்துவீச்சு தாக்குதலை தொடுத்தனர். இதனால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டே இருந்தது. குறிப்பாக கடைசி 6 ரன்களில் மட்டும் 4 விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 177 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. 20 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | INDvsAUS: ஜடேஜா - அஸ்வின் மாயாஜால சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா..! ரோகித் அரைசதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News