08:22 PM 09-07-2019
ஒருவேளை மழை நீடித்தால்?...
மழை சிறிது நேரத்தில் நின்றுவிட்டால்., 46 ஓவரில் இந்திய அணி 237 ரன்கள் குவிக்க வேண்டும். இல்லையெனில் இது ரிசர்வ் டே என்று தீர்மானிக்கப்படும். அதன்படி மேட்ச் இன்று நிறுத்தப்பட்டு நாளை நியூசிலாந்து விட்ட இடத்தில் இருந்து தொடங்கும். அதாவது 46.2 ஓவரில் தொடங்கும். இதேபோல மற்றொரு முறையும் பேசப்பட்டு வருகிறது. அதாவது டி.எல்.எஸ் முறைப்படி தற்போது 20 ஓவருக்கு மேட்சைக் குறைத்து இந்திய அணி 148 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முறையைப் பயன்படுத்தலாம என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால் நாளையும் மழை தொடர்ந்தால், ஒரு வேளை போட்டி கைவிடப்படும் என்ற நிலைமை ஏற்பட்டால் இதுவரை அணிகள் பெற்றிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு ஒரு அணி தேர்ந்தெடுக்கப்படும். அப்படியெனில் இந்திய அணியே அதிகப் புள்ளிகள் கொண்டுள்ளதால், நேரடியாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
07:37 PM 09-07-2019
ஒருவேளை நியூசிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்யவில்லை எனில்., இந்தியா வெற்றி பெற
46 ஓவர் எனில் 237
40 ஓவர் எனில் 223
35 ஓவர் எனில் 209
30 ஓவர் எனில் 192
25 ஓவர் எனில் 172
20 ஓவர் எனில் 148, ரன்கள் குவிக்க வேண்டும்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைப்பெற்று வரும் முதல் அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டுள்ளது!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
ஆரம்பம் முதலே இந்தியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தினறிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க துவங்கியது. ஆட்டத்தின் 46.1 ஓவர்கள் வரையில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Bad news
The rain has increased, and the teams have had to leave the field.
New Zealand: 211/5 (46.1 overs)#INDvNZ | #CWC19 pic.twitter.com/Q0sPZPkhRm
— Cricket World Cup (@cricketworldcup) July 9, 2019
அணி தலைவர் கேன் வில்லியம்ஸன் நிதானமாக விளையாடி 67(95) ரன்கள் குவித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த ரோஸ் டெய்லர் தற்போது களத்தில் நின்று 67*(85) ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு துணையாக டாம் லாத்தம் 3*(4) ரன்களுடன் களத்தில் உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்டின் குப்டில் 1(14) ரன்களில் வெளியேறினார்.
இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், பூம்ரா, ஹார்டிக் பாண்டையா, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாஹல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.