BWF உலக பேட்மிண்டன் தொடர் இறுதி போட்டியில் வென்று பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் பெற்றார்!
ரியோ ஒலிம்பிங்க வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரங்கனை பி.வி.சிந்து., இன்று நடைப்பெற்ற BWF உலக பேட்மிண்டன் இறுதி போட்டியில் ஜப்பானின் நொசோமி ஓகுஹாராவை சந்தித்தார். பரபரப்பாக சென்ற இப்போட்டில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
PV Sindhu beats Nozomi Okuhara to win BWF World Tour finals title. (file pic) pic.twitter.com/yNup9lIVTJ
— ANI (@ANI) December 16, 2018
2018-ம் ஆண்டிற்கான BWF உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டதிதல் பி.வி சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
முன்னதாக அவர் அரையிறுதி போட்டியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இன்டனோனுடன் மோதினார். இப்போட்டியில் அவர் 21-16, 25-23 என நேர் செட்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.