புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னதாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர், நாளை (2023, செப்டம்பர் 22) முதல் 27ஆம் தேதி வரையில் நடக்கிறது. அதன் பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது.
2023 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும். மிகவும் முக்கியமான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை ஒரு நாள் தொடருக்கு முன்னதாக, பலம் வாய்ந்த இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமான போட்டித்தொடராக இருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலே, அது ஐசிசி ஒரு நாள் அணிகளின் ரேங்கிங் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடிக்கும் என்பதால், இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதில் முனைப்பாக இருக்கும்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று, 8 ஆவது முறையாக சாம்பியனானது. ஆனால், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலமாக நம்பர் 1 இடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் நம்பர் 1 இடத்திலும், இந்தியா நம்பர் 2 இடத்திலும், ஆஸ்திரேலியா 3ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆசிய கோப்பையை சிராஜிடம் கொடுக்காமல் திலக் வர்மாவிடம் ரோகித் கொடுத்தது ஏன்?
ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகளுக்குப் பிறகு முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளராக ஆனார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், புதன்கிழமை அறிவிக்கப்பட்ட ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இந்த ஒருநாள் போட்டியில் நிகழவிருக்கும் சில முக்கியமான விஷயங்கள், இவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவும் மாறலாம்.
சுப்மான் கில் vs மிட்செல் ஸ்டார்க்
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரோஹித் மற்றும் கோஹ்லி இல்லாததால், இந்தியாவின் டாப் ஆர்டருக்கு நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் மிகவும் முக்கியமானவராக இருப்பார். இதனால், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஷுப்மான் கில் இடையிலான போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
டேவிட் வார்னர் vs இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இரண்டு 50+ ரன்கள் எடுத்தார். ஆசியக் கோப்பையில் ஜாலம் காட்டிய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் வலுவான வேகப்பந்துத் தாக்குதலை வார்னர் எதிர்கொள்வார்.
மேலும் படிக்க | 2023 ஆசியக் கோப்பை போட்டிகளில் முகமது சிராஜ் மற்றும் பிற வீரர்களின் சாதனைகள்
கிளென் மேக்ஸ்வெல் vs இந்திய பந்துவீச்சாளர்கள்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜடேஜாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் 71.50 என்ற சராசரியை வைத்திருக்கிறார். அவர் இரண்டு முறை மேக்ஸ்வெல்லை ஆட்டத்திலிருந்து நீக்கியுள்ளார்.
ஸ்டீவன் ஸ்மித் vs ரவீந்திர ஜடேஜா
ஆஸ்திரேலியாவுக்காக ரன்களை எடுக்கும் ரன் மெஷின் ஸ்டீவன் ஸ்மித், ஆறு மாதங்களுக்குப் பிறகு, தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். சுழற்பந்து வீச்சாளர் (wrist spinner) குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், ரவீந்திர ஜடேஜா இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு பொறுப்பாக இருப்பார்.
கேஎல் ராகுல் vs ஆடம் ஜம்பா
2023 ஆசிய கோப்பையின் போது, ராகுல் இலங்கையின் ட்விஸ்டிங் டிராக்குகளில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களிடமிருந்து ஸ்ட்ரைக்கை சுழற்றும் திறமைக்காக பாராட்டப்படுகிறார் ராகுல். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மிடில் ஆர்டருக்கு பொறுப்பேற்கும் ராகுல், லெக் ஸ்பின்னரான ஆடம் ஜம்பாவுக்கு எதிராக களமிறங்குகிறார்.
மேலும் படிக்க | Number 1: முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் போட்டி பவுலரானார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ