CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள்

CSK Team Members: நான்கு முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களில் இருந்து மீண்ட கிரிக்கெட்டர்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 26, 2023, 08:22 AM IST
  • கிரிக்கெட் வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொண்ட வீரர்கள்
  • திருப்புமுனை ஏற்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 4 முறை ஐபில் பட்டம் வென்ற ராசியான சிஎஸ்கே அணி
CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள் title=

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League (IPL)) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகும், நான்கு முறை பட்டத்தை வென்ற அணி சிஎஸ்கே. கிரிக்கெட் வாழ்க்கையில் போராடக் கொண்டிருந்த பல வீரர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை கிடைத்தது இந்த அணியில் சேர்ந்த பிறகுதான் என்றும் சொல்லப்படுகிறது.

பலரின் வாழ்க்கைக்கு திருப்புமுனை அமைத்துக் கொடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் திறமையும் இதற்கு காரணமாக கூறப்படுகிரது. CSK அணியில் இணைந்த பிறகு, தங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை சந்தித்த கிரிக்கெட்டர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.
 
மைக்கேல் ஹஸ்ஸி
ஐபில் போட்டிகளில் விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த பிறகு, மைக்கேல் ஹஸ்ஸி வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையைப் பெற்றார். அவர் 2008 முதல் 2013 வரை சென்னை அணிக்காக விளையாடினார், பிறகு மீண்டும் 2015 இல் சிஎஸ்கேவுக்கு திரும்பினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக 1700 ரன்களுக்கு மேல் அடித்த மைக்கேல் ஹஸ்ஸி, சிஎஸ்கேவின் சாம்பியன்ஷிப் வெற்றிகலுக்கு முக்கிய பங்கு அளித்ததால், "மிஸ்டர் கிரிக்கெட்" என்று பிரபலமானார்.  


 
அஜிங்க்யா ரஹானே
அஜிங்க்யா ரஹானேயின் கிரிக்கெட் வாழ்க்கை, சிஎஸ்கேவுடன் இணைந்தவுடன் தலைகீழாக மாறியது. ஐபிஎல் 2023 இல் சிறப்பாக விளையாடியதால், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் ராஹானே.
 
ஆஷிஷ் நெஹ்ரா
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு குறுகிய காலம் மட்டுமே இணைந்திருந்தாலும், அதை மறக்க முடியாது. 2014 மற்றும் 2015 இல் சென்னை அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெஹ்ரா, முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுக்காக அறியப்பட்டார். 2017ல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெற்றார்.
 
அம்பதி ராயுடு
இந்தியன் பிரீமியர் லீக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அம்பதி ராயுடு முக்கிய வீரராக இருந்துள்ளார். அவர் 2018 இல் இணைந்ததில் இருந்து அணிக்காக ஒரு நிலையான செயல்திறன் கொண்ட வீரராக இருந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள ராயுடு, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அணி பட்டத்தை வென்றபோதும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

 மேலும் படிக்க | WTC 2023: இங்கிலாந்தில் ஐசிசி உலகக்கோப்பையை வெல்லும் இந்திய அணியின் பேட்டர்கள்

ஷேன் வாட்சன்
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஷேன் வாட்சன், நான்கு சீசன்களில் CSK அணிக்காக விளையாடினார். 2018ம் ஆண்டு ஐபிஎல் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் முக்கிய அங்கமாக இருந்தார் ஷேன் வாட்சன். சிஎஸ்கேவுக்காக மொத்தம் 953 ரன்கள் மற்றும் ஆறு விக்கெட்டுகளை எடுத்தார்.
 
சிவம் துபே
2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட சிவம் துபே ஒரு நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டர் என நிரூபித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இருந்த அவரின் வாழ்க்கையில் சிஎஸ்கே அணியுடனான இணைப்பு அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உந்துகோலாக இருக்கும்.  

ராபின் உத்தப்பா
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2021 சீசனுக்காக ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்தார். அவரது முன்னாள் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து CSK இன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் ராபின் உத்தப்பா.

மேலும் படிக்க | IPL 2023 Match 35: மும்பை இண்டியன்ஸை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News