நீ குட்டையன்.. உன்னை விட ஈட்டி பெருசு.. 'தோல்வி' சொல்லைக் கடந்து 'ஜீரோவிலிருந்து ஹீரோ' ஆன கதை..

Zee Real Heroes Awards News In Tamil: ஜீ நியூஸின் 'ரியல் ஹீரோஸ் விருதுகள்' நிகழ்வில் ஈட்டி எறிதல் பயணம் குறித்து பாராலிம்பிக் 2024 தொடரில் தங்கப் பதக்கம் வென்ற நவ்தீப் சைனி பகிர்ந்துக் கொண்டார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 15, 2025, 11:15 PM IST
நீ குட்டையன்.. உன்னை விட ஈட்டி பெருசு.. 'தோல்வி' சொல்லைக் கடந்து 'ஜீரோவிலிருந்து ஹீரோ' ஆன கதை..  title=

Navdeep Saini Latest News: ஜீ ரியல் ஹீரோஸ் விருதுகள்: ஈட்டி எறிதல் போட்டி பற்றிப் பேசப்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வரும் பெயர் நீரஜ் சோப்ரா தான். இந்தியாவின் "தங்க மகன்" என அழைப்படுவார். ஆனால் கடந்த 6 மாதங்களில், "தங்க மகன்" ('கோல்டன் பாய்) நீரஜ் சோப்ராவுக்கு பிறகு, பாராலிம்பிக் 2024 தொடரில் தங்கப் பதக்கம் வென்ற நவ்தீப் சைனி பற்றியும் பேசப்படுகிறது. 

நாட்டிற்கு பெருமை சேர்த்த நவ்தீப் சைனியின் பயணம் எப்படி இருந்தது என்பதை ஜீ நியூஸின் 'ரியல் ஹீரோஸ் விருதுகள்' நிகழ்வில் பகிர்ந்துக் கொண்டார. மல்யுத்தப் போட்டியில் மாநில அளவிலான சாம்பியனாக இருந்த நவ்தீப், ஈட்டி எறிதலில் தனது பயணத்தை எவ்வாறு தொடங்கினார் என்பதை ஜீ நியூஸ் (Zee News) ஊடகத்திடம் தெரிவித்தார். அதுக்குறித்து பார்ப்போம்.

நவ்தீப் சைனி மல்யுத்தத்தில் தொடங்கி மாநில அளவிலான சாம்பியனாகவும் இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் ஆரம்பத்தில் ஒரு மல்யுத்த வீரராக இருந்தேன், ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அதை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.' பின்னர் நான் யூடியூப்பை போன்ற சமூக வலைத்தளங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வீடியோவை பார்த்தேன். 

அதாவது அந்த வீடியோவில் " ஒரு பானிபட் சிறுவன் நிறைய அதிசயங்களைச் செய்தான். உலக சாதனையை முறியடித்தான்." அது வேறும் யாருமில்லை.. நீரஜ் சோப்ரா தான். நான் பார்த்த வீடியோ நீரஜ் சோப்ரா பாய் சஹாபின் வீடியோ தான். 

அவர் 2016 ஆம் ஆண்டு ஜூனியருக்கான சாதனையைச் செய்தார். அதன் பிறகு பானிபட்டில் இருந்து இனி யாராவது ஈட்டி எறிதலில் உலக சாதனை படைக்க வேண்டும் என நினைத்தால், அது நாணக்கா இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான முயற்சியை தொடங்கினேன்., 

பின்னர் "2017 இல் பாராவில் நடந்த ஈட்டி எறிதலில் பங்கேற்றேன். அவர்களைப் பார்த்த பிறகு, என் கடின உழைப்புக்கும் பலன் கிடைத்தது" என்றார். 

உங்கள் கோபம் குறித்த கேட்ட கேள்விக்கு பதில் அளித்த நவ்தீப், "நான் பாரா ஆசிய விளையாட்டு, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மற்றும் பாரா உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு-மூன்று முறை நான்காவது இடத்தைப் பிடித்தேன். அதனால் நான் தோல்வியடைந்தவன் என்று முத்திரை குத்தப்பட்டேன். நீ மூன்று முறை நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறாய், உனக்கு அந்தத் திறமை இல்லை. நீங்கள் உனது விளையாட்டை மாற்றலாம்" எனக் கூறப்பட்டது. 

அவர்கள் கூறிய வாரத்தைகளை கொண்டு, எனக்குள் இருக்கும்.. அந்தக் குறைபாடு என்ன என்பதை நான் அறிந்தேன், நான் இன்னும் முன்னேற வேண்டியிருந்தது. முன்னேறினால் எல்லோரும் எனக்காக கைதட்டுவார்கள். எனக்கான இலக்கை நிர்ணயிக்கும் போது எனக்குள் பொறுமை இருந்தது. இப்படித்தான் "என்னை குறித்து பேசியவர்களுக்கு.. நானும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டினேன். என்மீது இருந்த தோல்வியாளன் என்ற குறிச்சொல்லை நீக்கினேன்" என்றார்.

உங்களை பொறுத்தவரை ஈட்டியின் நீளம் அதிகமாக இருந்திருக்கும். அந்த சவாலை எப்படி எதிர்கொண்டீர். அதுக்குறித்து சொல்லுங்கள் எனக் கேட்டப்போது நவ்தீப் கூறுகையில், 'ஐயா, நீங்கள் ஈட்டியின் நீளம் என்பது உடலின் எடை என்று நினைக்கிறீர்கள். அது இல்லை. நான் குட்டையாக இருந்தேன். என்னால் ஈட்டி தூரமாக ஏரியா முடியுமா? என்ற கேள்விகளும் எழுந்தன. இவனே குட்டையாக இருக்கிறான்.. இவன் வீசினால் அது அவன் பக்கத்தில் தானா விழும்? என்ற பிரச்சனையை நான் எதிர்கொண்டேன்" என்றார். 

அதேநேரம் நீரஜ் சோப்ரா என்னை விட உயரத்தில் மிகப் பெரியவர். அவர் நீண்ட தூரம் வீச முடியும். என்னால் முடியும? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பிறகு நான் என் நுட்பத்தை மாற்றினேன். பயிற்சியாளர் என்னைத் திட்டினார். நான் கடினமாக உழைத்து முன்னேறினேன். மீண்டும் மீண்டும் பயிற்சி செய்த பிறகு, ஈட்டி பின்புறத்தைத் தொடாமல் முன்புறத்தைத் தொட்டு வீசினால் தூரமாக போகும் என்ற வித்ததையை கத்துக்கொண்டேன்" என ஜாலியாக தெரிவித்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News