இங்கிலாந்து வீரரின் சாதனையை 27 ஆண்டுகள் கழித்து முறியடித்த பாபர் அசாம்! வேற லெவல் வெறித்தனம்!

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சத்தமே இல்லாமல் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2022, 08:46 PM IST
  • பாபர் அசாம் 425 பந்துகளில் 196 ரன்கள் எடுத்து சாதனை
  • இங்கிலாந்து வீரரின் சாதனை முறியடிப்பு
  • அதிரடி காட்டும் பாபர் அசாம்
இங்கிலாந்து வீரரின் சாதனையை 27 ஆண்டுகள் கழித்து முறியடித்த பாபர் அசாம்! வேற லெவல் வெறித்தனம்!  title=

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4-வது இன்னிங்சில் 425 பந்துகளில் 196 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். 1995-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 4-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கெல் ஏத்தர்டன் 492 பந்துகளில் 185 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

மேலும் படிக்க | சதங்களின் நாயகன் சச்சின்: 100 சதமடித்து 10 ஆண்டு நிறைவு!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் முதல் இன்னிங்ஸிங் 556 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 148 ரன்களுக்கு சுருண்டது. 2-வது இன்னிங்ஸில் 505 ரன்களை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் பாபர் அசாம் 425 பந்துகளில் 196 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து  4-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கெல் ஏத்தர்டன் சாதனையை முறியடித்துள்ளார். மைக்கெல் ஏத்தர்டன் 492 பந்துகளில் 185 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 27 ஆண்டுகள் கழித்து பாபர் அசாம் அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

Twitter Image

மேலும் படிக்க | IPL2022: மும்பையைவிட அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருக்கும் அணிகள்

இந்த சாதனை ஒருபக்கம் இருக்க 4-வது இன்னிங்ஸில் அதில பந்துகளை சந்தித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் 4-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து வீரர் மைக் ஏத்தர்டனும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து வீரர் ஹெர்ப் சுட்க்ளிப்பும், மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கரும் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில் 4-வது இடத்தை பாபர் அசாம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சத்தமே இல்லாமல் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து வருகிறார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News