மொயீன் அலி தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 7 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் பங்கேற்கின்றன. முதலாவதாக 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று 2வது போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. கேப்டன் மொயீன் அலி அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். இதில் தலா 4 பவுண்டரி மற்றும் சிக்சர்களும் அடங்கும்.
மேலும் படிக்க | 3 ஆண்டுக்கால வெறி... கிரிக்கெட் ரசிகர்கள் செய்த செயல் - 4 பேர் காயம்
ப்ரூக் மற்றும் டக்கட் ஆகியோர் கனிசமான பங்களிப்பை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இறுதி வரை விக்கெட்டே கொடுக்காமல் விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19.3 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
கேப்டன் பாபர் அசாம் 56 பந்துகளை எதிர்கொண்டு 110 ரன்கள் விளாசினார். 5 சிக்சர்களும், 11 பவுண்டரிகளும் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். மறுமுனையில் முகமது ரிஸ்வான், 51 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். இவரும் 4 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் விளாசி வாணவேடிக்கை காட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. மேலும், கடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு இதே கூட்டணியே காரணம்.இப்போது, இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அந்த சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ