சூதாட்ட புகார் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் சிக்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது. சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
Anti Corruption Case Update: Cricketer Nasir Jamshed banned for 10 years by Anti Corruption Tribunal.
Details to follow.— PCB Media (@TheRealPCBMedia) August 17, 2018
மேலும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.