முதலிடத்திக்கு முன்னேறிய இந்தியா!! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 26, 2019, 08:49 PM IST
முதலிடத்திக்கு முன்னேறிய இந்தியா!! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!! title=

ஒருநாள் தரவரிசை அட்டவணையில் முதலில் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, 2019 உலகக்கோப்பை தொடரில் 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

அதாவது இங்கிலாந்து அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இரண்டு புள்ளிகள் குறைந்து 122 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. 

அதேவேளையில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. இதுவரை இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளி அதிகம் பெற்று 123 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் இன்னும் 4 லீக் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. அதில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இதற்கிடையில் இந்திய அணி நாளை (ஜுன் 27) மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Trending News