Tokyo Olympics 2020: ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவில் (69 கிலோ) இந்தியாவின் லவ்லினா பங்கேற்றார். அரையிறுதியில் போட்டியில் அவர் நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர்.
அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் (Tokyo Olympic Games) பெண்களுக்கான குத்துச்சண்டை வெல்டர் வெயிட் எடைப் பிரிவில் புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருக்கமாக வந்தார். இரண்டாவது சுற்றிலும் அதே போல் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்து 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருங்கி வந்து தோற்றார். அடுத்த சுற்றில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி மீண்டும் 10 புள்ளிகளை அனைத்து ஜட்ஜ்களிடமிருந்து பெற லவ்லினா 9,9,9, 8,8 என்று பெற்று பின் தங்கினார்.
ALSO READ | Tokyo Olympics: இந்தியாவுக்கு மேலும் ஒரு பின்னடைவு, பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது
இதனையடுத்து துருக்கி வீராங்கனை சிறப்பாக விளையாடி 5-0 என லவ்லினாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் தோல்வியடைந்த லவ்லினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை லவ்லினா வென்றுள்ளார். இதனால் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது. இதுவரை இந்தியா 1 வெள்ளி 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
முன்னதாக பளுதுாக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், பாட்மின்டனில் சிந்து (PV Sindhu) வெண்கலம் பதக்கம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தகது.
ALSO READ | வறுமையிலிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான பயணத்தில் ராணி ராம்பால்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR