உலக கோப்பையில் பாண்டியா நல்லாவே விளையாடக்கூடாது - நடாசா உள்குத்துடன் போட்ட பதிவு

Hardik Pandya, Natasha : ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது மனைவி நடாஷா உள்குத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 29, 2024, 06:16 PM IST
  • நியூயார்க் சென்ற ஹர்திக் பாண்டியா
  • மும்பையில் இருக்கும் நடாஷா
  • இன்ஸ்டாகிராமில் வேண்டுமென்றே போட்ட பதிவு
உலக கோப்பையில் பாண்டியா நல்லாவே விளையாடக்கூடாது - நடாசா உள்குத்துடன் போட்ட பதிவு title=

நடாஷா - பாண்டியா விவாகரத்து

கிரிக்கெட் உலகின் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் நடாஷா - ஹர்திக் பாண்டியா இடையே விவகாரத்து நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு இருவரும் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை. நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில், பெயரில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கிய பிறகே இருவருக்கும் இடையே விரிசல் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. அதன்பின்னர் பாய் பெஸ்டியுடன் மும்பை உள்ளிட்ட ஊர்களில் நடாஷா சுற்றி வந்தார். அப்போது கூட பாண்டியாவுடனான விவகாரத்து குறித்து கேட்டதற்கு அவர் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியாக கடந்து சென்றார்.

மேலும் படிக்க | ரியான் பராகை காட்டிக் கொடுத்த history என்ன சிம்ரன் இது!! 

இருவருக்கும் என்ன பிரச்சனை

ஹர்திக் பாண்டியா- நடாஷா இருவரும் நட்சத்திர தம்பதிகளாவே வலம் வந்தனர். பாண்டியா கிரிக்கெட்டிலும், நடாஷா மாடல் மற்றும் விளம்பரங்களிலும் பிஸியாக இருந்தனர். கோடிகளில் சம்பாத்தியமும் வந்தது. இருப்பினும் பாண்டியாவின் சொத்துகள் அனைத்தும் அவரின் அம்மாவே முழுமையாக நிர்வகித்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து பாண்டியா வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். அப்போது இருந்தே இருவருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 6 மாதங்களாக பாண்டியாவும், நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நடாஷாவின் பிறந்தநாளுக்கு கூட ஹர்திக் பாண்டியா வாழ்த்து தெரிவிக்கவில்லை.

டி20 உலக கோப்பையில் பாண்டியா

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். ஆனால் அதற்கு ஒரு போட்டியில் கூட நேரில் வந்து அவருக்கு நடாஷா சப்போர்ட் செய்யவில்லை. அப்போதே பலருக்கும் சந்தேகம் எழத் தொடங்கியது. கடந்த ஒருசில நாட்களாக இருவருக்கும் இடையிலான விரிசல் அப்பட்டமாக வெளியில் தெரியத் தொடங்கியது. இருப்பினும் பாண்டியா இது குறித்து எதுவும் பேசாமல் டி20 உலக கோப்பையில் பங்கேற்க நியூயார்க் சென்று இந்திய அணியுடன் இணைந்து விட்டார். 

நடாஷா போட்ட பதிவு

அவருடன் மனைவி நடாஷா செல்லவில்லை. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக மும்பை வோர்லியில் இருந்து எடுத்த புகைப்படத்தை வேண்டுமென்றே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இருக்கிறார் அவர். அதுவும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று போட்டுள்ளார். ஹர்திக்பாண்டியாவுடன் செல்லாததை மறைமுகமாக தெரிவித்திருப்பதுடன் அவர் டி20 உலக கோப்பையில் நல்லா விளையாடக்கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்களா?, இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நடாஷாவுக்கு கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தான்...!? வெளியான பரபரப்பு தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News