செம்ம மாஸ்ஸா பண்றாங்க CSK! வைரலாகும் வீடியோ!

IPL 2018 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Royal Challengers Bangalore அணிகள் நேற்று மோதின. இதில் Kolkata Knight Riders அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Last Updated : Apr 9, 2018, 10:46 AM IST
செம்ம மாஸ்ஸா பண்றாங்க CSK! வைரலாகும் வீடியோ! title=

IPL 2018 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Royal Challengers Bangalore அணிகள் நேற்று மோதின. இதில் Kolkata Knight Riders அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தொடரை அதிரடியாக தொடங்கி இருந்தார். சிறந்த கேப்டன் என்று இந்த போட்டியின் மூலம் நிரூபணம் செய்துள்ளார் அவர். 

இந்நிலையில் போட்டிக்கு பின் Kolkata Knight Riders அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் Chennai Super Kings அணி குறித்து பேட்டி அளித்துள்ளார். தற்போது அந்த இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், தினேஷ் கார்த்திக்கிடம் பெண் ஒருவர் கிரிக்கெட் பந்தில் கையெழுத்து போட சொல்கிறார். உடனே அவரது தமிழ் நண்பர் ''இப்படியே 50 பந்துல கையெழுத்து போடா சொல்லுவாங்க'' என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு தினேஷ் கார்த்திக் ''ஜி கலாய்க்கிறீங்க பார்த்தீங்களா, அந்த அம்மாவை'' என்று கூறினார். பின்னர், செம்ம மாஸ்ஸா பண்றாங்க CSK. நேத்து செம மேட்ச்ல. கும்முன்னு ஸ்டார் ஆச்சு என்று தெரிவித்த வீடியோ வைரலாகி உள்ளது.

Trending News