டோனி என்னை பலமுறை காப்பாற்றி உள்ளார்: விராட் கோலி

டோனி ஒரு தலைவர் மட்டும் அல்ல, பல முறை அணியில் இருந்து நான் நீக்கப்படாமல் காப்பற்றியதும் அவர் தான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 7, 2017, 04:32 PM IST
டோனி என்னை பலமுறை காப்பாற்றி உள்ளார்: விராட் கோலி  title=

புதுடெல்லி: டோனி ஒரு தலைவர் மட்டும் அல்ல, பல முறை அணியில் இருந்து நான் நீக்கப்படாமல் காப்பற்றியதும் அவர் தான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ச்சியாக விளையாடவில்லை. சில ஏற்ற இறக்கங்களை கண்டார். இதனால், அணியில் விராட் கோலியின் இடம் நிரந்தரமாகவில்லை. இருப்பினும், விராட் கோலியின் திறமை மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்த டோனி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார். 

இந்நிலையில் பிசிசிஐ தொலைக்காட்சிக்கு இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

எனக்கு வழிகாட்டியவராகவும் வாய்ப்பளித்த நபராகவும் எப்போதும் இருந்தவர் டோனி. ஒரு கிரிக்கெட் வீரராக நான் வளர்வதற்கு போதுமான வாய்ப்புகளை கொடுத்தவர். நான் அணியில் இருந்து நீக்கப்படாமல் பலமுறை என்னைக்காப்பாற்றியவர் அவர். 

எம்.எஸ் டோனி என்று நீங்கள் சந்தித்தால், நமது மனதில் முதல் வார்த்தை கேப்டன் என்றுதான் தோன்றும். டோனியை வேறு எந்த வழியிலும் தொடர்பு படுத்தி பார்க்க முடியாது. என்னைப்பொறுத்தவரை எப்போதும் அவர்தான் என்னுடைய கேப்டனாக இருக்க போகிறார்.

 

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News